பாலிவுட் நடிகை சன்னி லியோன், அவரின் கணவர் டேனியல் வெப்பேர் லத்தூரைச் சேர்ந்த 21 மாதக் குழந்தையை தத்தெடுத்துள்ளனர்.
சன்னி லியோன் பெரும்பாலும் சர்ச்சைகள் நிறைந்த விஷயத்தில்தான் மீடியாக்களில் அடிபடுவார். பணத்திற்காக என்னவேண்டுமானாலும் செய்வார் என்பது அவரின் மீதுள்ள குற்றச்சாட்டு.ஆனால், இந்த முறை சன்னிலியோனின் பெயர் மீடியாக்களில் வேறு விதத்தில் அடிபட்டுள்ளது. மகராஸ்ட்ர மாநிலம் லத்தூரைச் சேர்ந்த 21 மாதக் குழந்தையை அவர் தத்தெடுத்துள்ளார். குழந்தையின் பெயர் நிஷா.
தற்போது குழந்தையுடன் சன்னி லியோன் இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. குழந்தை குறித்து சன்னி கூறுகையில், ''அவளின் சிரிப்பு இதயத்தை உருக்கும். சுதந்திரக் குழந்தையாக அவள் வளர்ந்து சிறந்த பெண்ணாக மிளிர்வாள்'' என தெரிவித்துள்ளார்.