டெல்லி மெட்ரோ ரயில் நிலையம் ஒன்றில் ஜோடி ஒன்று நெருக்கமாக இருந்த காட்சி ஆபாச இணைய தளம் ஒன்றில் வெளியாகி அதிர்ச்சியளித்துள்ளது.
டெல்லி மெட்ரோ ரயில் நிலையம் ஒன்றின் கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சி ஆபாச இணைய தளம் ஒன்றில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. பொது இடம் என்பதை மறந்து நெருக்கமாக இருந்த அடையாளம் தெரியாத இணையின்மேல் ஆசாத் நகர் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜூலை 18ம் தேதி பிற்பகல் 2:22 மணிக்கு இக்காட்சி, கண்காணிப்பு காமிரா பதிவிலிருந்து ஸ்மார்ட்போனில் பதிவு செய்யப்பட்டுள்ளது. பிறகு அது ஆபாச தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. டெல்லி மெட்ரோ ரயில் நிர்வாகம் உறுதி செய்யும் முன்னதாகவே ஒரு லட்சம் பேர் இக்காட்சியை பார்த்துள்ளனர்.
பயணியர் பொது இடமான மெட்ரோ ரயில் நிலையங்களில் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாமென டெல்லி மெட்ரோ நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
மெட்ரோ ரயில் நிலைய கண்காணிப்பு காமிரா பதிவினை வெளியே கசிய விட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.
பயணியரின் பாதுகாப்புக்கு பயன்படுத்தப்பட வேண்டிய கண்காணிப்பு காமிரா பதிவுகள் தவறான நோக்கத்தில் பயன்படுத்தப்படுவது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இரவுக்கு ஆயிரம் கண்கள் இருக்கலாம்; தொழில்நுட்பத்திற்கு பல்லாயிரம் கண்கள் என்பதை புரிந்து எச்சரிக்கையாக நடக்கவேண்டியதும் அவசியம்!