முகத்தில் உள்ள கருமை நீங்கவேண்டுமா??அப்போ தவறாமல் இதை ட்ரை பண்ணுங்க...

how to cure black heads using coffee mask in tamil

by Logeswari, Aug 27, 2020, 17:44 PM IST

மனிதர்கள் சோர்வாக இருக்கும் நேரத்தில் காபியை அருந்தி தங்களின் உடல் சோர்வை போக்கி கொள்வார்கள்.அதுபோல நம் சருமம் சோர்வாக இருக்கும் வேளையில் நம் முகத்தில் கருமை எட்டி பார்க்கும். இதனை தக்க சமையத்தில் விரட்டி அடிக்காவிட்டால் முகத்தை கருமை சூழ்ந்து கொள்ளும்.காபி குடிக்க மட்டும் பயன்படாமல் முகத்தில் உள்ள கருமையை போக்க சிறந்த பேஸ் மாஸ்க்காகவும் பயன்படுகிறது.இதனால் முகத்தில் உள்ள இறந்த செல்கள்,அழுக்கு போன்றவற்றை முழுவதுமாக நீக்கப்பட்டு முகம் மிகுந்த பொலிவு அடையும்.இதனை எப்படி தயாரிப்பது குறித்து பார்க்கலாம்.

முகம் கருமை நீங்க:-

தேவையான பொருள்கள்:-

காபி பவுடர்- 1 டேபிள் ஸ்பூன்

பால்-1 ½ டேபிள் ஸ்பூன்

செய்முறை:-

ஒரு கிண்ணத்தில் பால் மற்றும் காபி பவுடரை நன்கு கலந்து கொள்ள வேண்டும்.பின் முகத்தை குளிர்ந்த நீரினால் கழுவி துடைக்க வேண்டும்.

கலந்து வைத்த கலவையை முகம் மற்றும் கழுத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

15 நிமிடத்திற்கு பிறகு மிதமான குளிர்ந்த தண்ணீரில் முகத்தை கழுவ வேண்டும்.

இந்த பேஸ் மாஸ்க் வாரத்தில் இரண்டு முறை பயன்படுத்தி வந்தால் முகத்தில் உள்ள கருமைகள் நீங்கும்.

முக தழும்புகள் நீங்க;-

தேவையான பொருட்கள்:-

காபி பவுடர்-1 டீஸ்பூன்

பால்-1 ½ டீஸ்பூன்

எலுமிச்சை சாறு-1 பழம்

தேன் -1 டீஸ்பூன்

செய்முறை;-

ஓரு கிண்ணத்தில் காபி பவுடர்,பால்,எலுமிச்சை சாறு,தேன்,போன்ற எல்லா பொருள்களையும் ஒன்றாக எடுத்து கலந்து கொள்ள வேண்டும்.

சுத்தமான முகத்தில் கலந்த கலவையை பூசி 15-20 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.15-20 நிமிடங்கள் கழிந்த பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும்.

இதனை வாரத்தில் ஒரு முறை தொடர்ந்து வந்தால் கருப்பு தழும்பகள் மாயமாய் மறையும்.

You'r reading முகத்தில் உள்ள கருமை நீங்கவேண்டுமா??அப்போ தவறாமல் இதை ட்ரை பண்ணுங்க... Originally posted on The Subeditor Tamil

More Lifestyle News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை