தியானம் செய்வதால் பயன் உண்டா ?

ஒவ்வொரு மனிதருக்கும் மன அமைதி என்பது அவசியம் தேவை . மன அமைதி இல்லை என்றால் ஒரு வெறுப்பு, மனோ வியாதி, திருப்தியின்மை, ஏமாற்றம் மற்றும் கவலைகளுடனும் வாழவேண்டிய கட்டாயம் ஏற்படும்.ஒருவர் பயத்துடனும் பொறாமையுடன் கவலைகளில் இருந்து விடுபட முடியாமல் வாழ்வதற்கும் மனம் தான் முக்கிய காரணம் . இவை வாழ்க்கையிலும் தொழிலிலும் தவறான முடிவுகளை எடுப்பதற்குக் காரணமாகவும் அமைந்து விடுகிறது. உறுதியான மற்றும் நிலையான மனம் இல்லை என்றால் இது போன்ற மனம் சார்ந்த பிரச்சனைகள் உருவாக வழி செய்கிறது. மனம் சார்ந்த பிரச்சனைகளில் இருந்து விடுபட என்ன தான் வழி?

தியானம் ஒன்றுதான் மனம் சார்ந்த பிரச்சனைகளில் இருந்து விடுபட ஒரே வழி என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள். தியானம் மட்டுமே பக்க விளைவுகள் இல்லாத மருத்துவம். மனம் தொடர்பான பிரச்சனைகளிலிருந்து விடுபடத் தியானமே சிறந்த வழி வழி. தியானத்தைத் தொடர்ந்து செய்யும் போது சரியான வழியில் முடிவு எடுக்க இயலும். மனது சரியான வழியில் சென்றால்தான் உடல் ஆரோக்கியமும் கெடாமல் இருக்கும்.இயற்கையிலேயே கலப்படம் இல்லாதது மனித மனம்தான் . ஆனால் வாழ்க்கையில் ஒருவர் எதிர்கொள்ளும் நிகழ்வுகள் பயம் பொறாமை போன்றவையே கவலைகளாகவும் கோபமாகவும் மாறி தவறான முடிவுகள் எடுக்கத் துணை போகிறது.

மனக்குழப்பங்கள் தான் வாழ்க்கையில் ஒருவரைக் கஷ்டப்பட வைக்கிறது. தியானம் செய்கையில் குழப்பங்கள் நீங்கி மனதைச் சரியாகச் சிந்தனை செய்ய வைக்கின்றது. இதற்காகக் கடுமையாக உடலை வருத்தும் பயிற்சிகள் எதுவும் தேவையில்லை .ஒரு சதவீதம் கூட உடலை வருத்தாமல் வலியில்லாமல் செய்யும் மனப்பயிற்சி தான் தியானம். ஒரு நாளில் சில நிமிடங்கள் தியானம் செய்வதன் மூலம் மனதினை ஒரு முகப்படுத்தலாம். இதன் மூலம் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் நன்மைகள் உண்டு. தொடர்ந்து தியானம் செய்தால் மனரீதியான நோய்களில் இருந்து விடுபடலாம் என்று அறிவியல்பூர்வமான ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. தியானம் ஜாதி மதம் இனத்திற்கு அப்பாற்பட்டது. யாரும் செய்யலாம் . இதற்கு வயது வரையறையும் கிடையாது. தியானம் செய்யும்போதுதான் ஒரு மனிதனின் இயக்கம் தடுக்கப்படுகிறது. அதன்மூலம் மனதிற்கு ஓய்வு கிடைக்கிறது.

மனதுக்கும் உடலுக்கும் போதிய ஓய்வு கிடைக்கையில் குடும்ப சூழ்நிலை வேலை அல்லது தொழில் செய்யும் இடத்தில் ஏற்படும் பயம் , கவலை, மன அழுத்தம் நீங்குகிறது. இன்னும் சொல்லப்போனால் இயற்கையாகவே அவை விலகுகிறது. வெறும் 20 நிமிடங்கள் செய்யும் தியானத்தின் மூலம் கிடைக்கும் ஓய்வு ஆறு மணி நேரம் தூங்கினால் கிடைக்கும் ஓய்வை விட அதிகமானதாம். தியானம் செய்கையில் ரத்த அழுத்தம் சரியான அளவில் நிலை நிறுத்தப்படுகிறது . அதிகபட்ச அல்லது குறைந்த பட்ச ரத்த அழுத்தம் என்ற வேறுபாடு இல்லை. தியானம் செய்வதால் உடல் ரீதியாகக் கிடைக்கும் நன்மைகள் ஏராளம் என்று விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. மன அமைதி கிடைக்கும் போது குறிக்கோளை இலகுவாக அடைய முடியும். மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் ஏற்படும் பிரச்சனைகளைச் சரிசெய்யத் தியானம் மட்டுமே சிறந்த மருந்தாகும் .

Advertisement
மேலும் செய்திகள்
what-are-the-benefits-in-adding-ghee-in-rice
தினமும் சாப்பாட்டில் நெய் கலந்து கொள்வதால் என்ன நன்மைகள்? வாங்க பார்க்கலாம்..
women-can-get-corona-vaccines-even-during-menstruation
மாதவிடாய் காலத்தில் பெண்கள் கொரோனா தடுப்பூசி போடலாமா..? கூடாதா…?
what-are-the-benefits-of-using-some-kitchen-ingridents-in-tamil
வீட்டின் சமையலறையில் இருக்கும் பொருள்களை வைத்து ஃபேஷியல் செய்வது எப்படி??
what-are-the-disadvantage-for-girl-while-eating-red-meat
பெண்கள் ஏன் அதிகமாக இறைச்சி எடுத்துக்க கூடாது தெரியுமா?? வாங்க தெரிந்து கொள்ளலாம்..
relationship-these-are-the-most-googled-questions-about-sex
பாலியல் உறவு குறித்து கூகுள் இணையத்தில் தேடப்பட்ட அதிக கேள்விகள்
details-about-world-virus-impact
விலங்கியல் நோய்களால் 3.25 கோடி மக்கள் உயிரிழப்பு... என்னதான் தீர்வு?!
what-are-the-benefits-in-child-growth
குழந்தைகள் உயரமாக வளர இந்த டிப்ஸ்யை பயன்படுத்துங்கள்..
how-to-cure-belly-in-tamil
இனி தொப்பையை குறைப்பது வெரி ஈஸி!! இதை செய்தால் மட்டும் போதுமாம்..
what-are-the-benefits-of-drinking-beetroot-juice
தினமும் பீட்ருட் சாறு குடிப்பதால் உடலுக்கு எவ்வகை ஆரோக்கியம் கிடைக்கும்??
what-are-the-symptoms-of-corona-virus
இந்த அறிகுறி இருந்தால் கண்டிப்பாக உங்களுக்கு அந்த நோய் தான்!! நூறு சதவீதம் உறுதி..

READ MORE ABOUT :