ரே என்னும் சுறா இனம் அழியும் அபாயம் - விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Ray Shark fish extinction danger scientists alerts

by Devi Priya, Dec 5, 2018, 09:55 AM IST

'ரே' என்னும் அரிய வகையை சேர்ந்த சுறா இன மீன்கள் அழியும் அபாயத்தில் உள்ளது என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

இந்த அரிய வகை சுறாக்கள் பேருந்தின் பாதி நீளம் கொண்டவை. வாலின் மூலம் இரையை பிடித்து உண்ணும் "ரேக்கள்" அழியும் உயிரின பட்டியலில் உள்ளது.

சுறாக்களின் அழிவு குறித்த விழிப்புணர்வு மக்களுக்கு இல்லை என விஞ்ஞானிகள் பலர் கூறுகின்றனர். இந்த "உயிருள்ள படிமங்கள்" ஒன்றை இழந்தாலும், மில்லியன் கணக்கான ஆண்டுகள் நிகழ்ந்த பரிணாமவியல் வரலாறு அழிந்துவிடும்.

சுறாக்கள் மனிதர்களை கொல்லக்கூடியது என்ற கட்டுக்கதை மிகவும் ஆபத்தானது. கடல்வாழ் உயிரினங்களின் உணவு சங்கிலியில் முதல் இடத்தை வகிக்கும் சுறாக்களின் வாழ்வுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அது ஒட்டுமொத்த மீனினங்கள் மீதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதோடு மனிதர்களின் வாழ்வாதாரத்திலும் பாதிப்பை உண்டாக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

மேலும், கடலில் மீன்பிடிக்கும்போது தெரிந்தோ, தெரியாமலோ சுறாக்கள் மீது நடத்தபடும் தாக்குதலும் இதன் அழிவிற்கு முக்கிய காரணமாக பங்கு வகிக்கிறது. அதனோடு கடற்கரையோர பகுதிகளில் மேற்கொள்ளப்படும் ஆக்கிரமிப்புகள், மாங்குரோவ் காடுகளின் அழிப்பு, மாசடைந்து வரும் தண்ணீர் ஆகியவையும் முக்கிய காரணமாக உள்ளது.

லார்ஜ்டூத் சாபிஷ், தி கரீபியன் எலக்ட்ரிக் ரே, தி ஸிப்ரா ஷார்க், தி வேல் ஷார்க், தி பாஸ்கிங் ஷார்க் ஆகிய சுறாமீன் இனங்களும் அழியும் ஆபத்தில் இருக்கிறது என விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

You'r reading ரே என்னும் சுறா இனம் அழியும் அபாயம் - விஞ்ஞானிகள் எச்சரிக்கை Originally posted on The Subeditor Tamil

More Lifestyle News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை