சிவராத்திரிக்கு கண் விழிப்பது ஏன்?

Feb 13, 2018, 11:41 AM IST

இறைவன் அருள் கிடைக்க நினைத்த காரியம் நடக்க சிவராத்திரி அன்று கண் விழித்து விரதமிருந்து சிவபெருமானை வணங்க வேண்டும்.

சிவராத்திரியன்று, முதல் நாள் ஒரு பொழுது இருந்து சிவன் சிந்தனையுடன் கண் விழித்திருந்து நான்கு சாம வழிபாடு செய்ய வேண்டும். அடுத்த நாள் காலையில் தீர்த்தமாடி ஸ்வாமி தரிசனம் செய்து அடியார்களுடன் உணவு அருந்தி விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.

சிவராத்திரிக்கு மறுநாள் சிவபுராணம் படித்து அல்லது கேட்டு அன்றைய பகல் பொழுதை கழிக்க வேண்டும்.

மனிதன் தனது ஐம்புலன்களையும் கட்டுப்படுத்துவதே விரதம் இருப்பதன் அடிப்படை நோக்கமாகும். உணவை தவிர்க்கும் போது உணர்வுகளை கட்டுப்படுத்துவது மிகவும் எளியது என்றும் தெரியவைப்பது. தினமும் நாம் அனுபவிக்கும் நித்திரை தாமதத்தின் வெளிப்பாடு என்றும், விழித்திருப்பதன் மூலம் அதே குணம் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது.

இப்படி உணவையும் தூக்கத்தையும் கட்டுப்படுத்துவதன் மூலம் நாம் சாதாரண விழிப்பு நிலையையும், விழிப்பற்ற தூக்க நிலையையும் கடந்து மிக உயர்ந்த உணர்வு விழிப்பு நிலைக்கு செல்கிறோம். சாதாரண விழிப்பு உறக்க நிலைகளில் இறைவனை உணர்வதற்கு தடையாக இருந்ததாக கருதப்பட்டன . தினமும் விழிப்பு நிலைக்கும் தூக்க நிலைக்கும் போய் வரும் நாம் உயர் விழிப்பு நிலை பற்றி உணர்வதே இல்லை.

சிவராத்திரியில் விரதமிருந்து உறக்கத்தை தவிர்க்கும் போது ஐம்புலன்கள் கட்டுப்படுத்தப்படுகிறது. அந்த நிலையில் நின்று சிவபெருமானை போற்றி வழிபடும் போது உணர்வுகள் பால் போல் பொங்கி நம்மை உயர்ந்த விழிப்பு நிலைக்கு கொண்டு செல்ல உதவுகிறது.

You'r reading சிவராத்திரிக்கு கண் விழிப்பது ஏன்? Originally posted on The Subeditor Tamil

More Spirituality News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை