சரவணபெலகோலா பாகுபலிக்கு 1008 குடங்களில் அபிஷேகம்!

Feb 24, 2018, 12:12 PM IST

கர்நாடக மாநிலம், சரவணபெலகோலாவில் உயர்ந்து நிற்கும் ஒற்றைக்கல் சிற்பம் `கோமதேஸ்வரா’ என்கிற பெயரில் அழைக்கப்படுகின்றது. அந்தச் சிலைக்கு பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மகாமஸ்தகாபிஷேகம் நடைபெறும்.

பிப்ரவரி மாதத்தின் முதல் வாரத்தில் தொடங்கி நடந்துவரும் விழாவின் முக்கியப் பகுதியான புனித நீராடல் 17-ம் தேதி தொடங்கியது. இந்த விழா, வரும் 25-ம் தேதி வரை நிகழும்.

சரவணபெலகோலாவில் நடைபெறும் புனித நீராடல் நிகழ்வுக்கு, சமணத் துறவிகள் 350க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

சிலைக்கு 1,008 குடங்களில் பால், மஞ்சள், சந்தனம் உள்ளிட்டவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. இந்தச் சிலை ‘பாகுபலி’ என்று அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

You'r reading சரவணபெலகோலா பாகுபலிக்கு 1008 குடங்களில் அபிஷேகம்! Originally posted on The Subeditor Tamil

More Spirituality News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை