வங்கி கடன் வசூல் ஏஜென்சிகள் கெடுபிடியை தடுக்க முடியாதா? நீதிபதிகள் கேள்வி...!

Advertisement

கொடுத்த கடனை வசூலிக்க சில வங்கிகள் தனியார் ஏஜென்சிகள் மூலம் அடாவடி செய்யும் நபர்களை அனுப்பி வசூல் செய்து வருகிறது. இப்படி வசூல் செய்ய வரும் நபர்கள் கடன் பெற்றவர்களின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அடாவடியாக நடந்து கொள்கின்றனர். இதனால் பெண்களும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர்.இப்படிப் பாதிக்கப்படராமநாதபுரம் மாவட்டம், மாங்காட்டைச் சேர்ந்த பூபதி ராஜா என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

கேணிக்கரையிலுள்ள தனியார் நிதி நிறுவனத்தில் நான் வீட்டுக்கடன் வாங்கினேன். மாத தவணையை முறையாகச் செலுத்தி வந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக என்னால் தவணையை உரிய முறையில் செலுத்த முடியவில்லை. இதனால், நிதி நிறுவன வசூல் பிரிவினர் வீட்டுக்கு வந்து தகாத வார்த்தைகளில் திட்டுகின்றனர். குடும்பத்தினரையும் மிரட்டுகின்றனர். அடிக்கடி வந்து தொந்தரவு செய்கின்றனர். எனவே, இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று அவர் தன் மனுவில் குறிப்பிட்டிருந்தார். கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு , கடன் வசூல் செய்யும் தனியார் ஏஜென்சிகள் சட்டவிரோதமாக நடப்பதைத் தடுக்க முடியாதா? இவர்கள், ஏழைகளிடம் தான் அதிகளவு கெடுபிடி காட்டுகின்றனர். ஆயிரக்கணக்கான கோடி கடன் வாங்கி செலுத்தாவர்களிடம் கெடுபிடியைக் காட்டுவதில்லை என்றனர்.



பின்னர் நீதிபதிகள், கடந்த 10 ஆண்டுகளில் இது போன்ற விவகாரங்களில் ரிசர்வ் வங்கி தரப்பில் எத்தனை குற்றவியல் புகார்கள் பெறப்பட்டுள்ளன? வங்கி அதிகாரிகள், கடன் வசூல் ஏஜென்சிகள் சட்டவிரோதமாகச் செயல்படுகிறார்களா? இதைத் தவிர்க்க என்ன செய்வது? கடன் வசூலில் தனியார் ஏஜென்சிகளை தவிர்க்கலாமா என்பது குறித்து மத்திய நிதித்துறைச் செயலர், ரிசர்வ் வங்கி மண்டல இயக்குநர் ஆகியோர் பதிலளிக்கவேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை நவ. 9ஆம் தேதிக்குத் தள்ளி வைத்தனர்.

Advertisement

READ MORE ABOUT :

/body>