கர்நாடகாவில் பாஜகவின் எடியூரப்பா முதல்வராகி நாளை நம்பிக்கை வாக்கு கோர உள்ளார்.இந்நிலையில் ஒரு நாள் முன்னதாக, மேலும் 14 அதிருப்தி எம்எல்ஏக்களை சபாநாயகர் ரமேஷ்குமார் அதிரடியாக தகுதி நீக்கம் செய்துள்ளார். இதனால் எடியூப்பா, நாளை நம்பிக்கை வாக்கெடுப்பில் எளிதாக வெல்வது உறுதி என்றாலும், சபாநாயகரின் அவசர முடிவுக்கும் பல காரணங்கள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மாதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளைச் சேர்ந்த அதிருப்தி எம்எல்ஏக்கள் 14 பேரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் ரமேஷ்குமார் அதிரடி காட்டியுள்ளார். ஏற்கனவே 3 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் பதவி பறிக்கப்பட்ட எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.
கர்நாடகாவில் மீண்டும் ஒரு அரசியல் கலாட்டா ஆரம்பமாகியுள்ளது. குமாரசாமியின் ஆட்சியைக் கவிழ்க்க இந்த முறை பாஜக பக்காவாக பிளான் போட்டு விட்டதால், ஆட்சி அம்பேல் ஆவது உறுதி என்றே தெரிகிறது.