சுஷ்மா ஆளுநரானாரா? பரபரத்த செய்தி.. வாழ்த்து டிவீட் போட்டு ஏமாந்த மத்திய மந்திரி

முன்னாள் மத்திய வெளியுறவு அமைச்சரான சுஷ்மா ஸ்வராஜ், ஆந்திர மாநில புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டதாக நேற்று ஒரு செய்தி வெளியானது. ஆனால் அந்த செய்தியில் உண்மையில்லை என பின்னர் தெரிய வந்தது. அதிகாரப்பூர்வமற்ற செய்தியை நம்பி சுஷ்மாவுக்கு டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்த மத்திய அமைச்சர் ஹர்ஷவர்த்தன் பின்னர் அந்தப் பதிவை அவசர அவசரமாக நீக்கிய கூத்து நடந்தேறியுள்ளது Read More


மும்மொழிக் கொள்கைக்கு தமிழக அரசு ஆதரவா..? கண்டனக் குரல் எழுந்ததால் டுவிட்டர் பதிவை நீக்கிய எடப்பாடி

இந்தியாவின் பிற மாநிலங்களில் தமிழ் மொழியை விருப்ப மொழியாக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, டுவிட்டரில் கோரிக்கை விடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.மும்மொழிக் கொள்கையை ஏற்று புறவாசல் வழியாக இந்தித் திணிப்புக்கு தமிழக அரசு கதவைத் திறந்து விடும் முயற்சி என்று பல்வேறு தரப்பிலும் கண்டனக் குரல் எழுந்ததைத் தொடர்ந்து, தனது டிவிட்டர் பதிவை பதிவிட்ட 4 மணி நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமி நீக்கி விட்டார் Read More


அடுத்த 24 மணி நேரம் ரொம்ப முக்கியம்.. விழிப்புடன் இருங்கள்...! காங். தொண்டர்களுக்கு ராகுல் 'டிவீட்'!

ஓட்டு எண்ணிக்கை நாளை நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் தொண்டர்கள் யாரும் அச்சப்பட வேண்டாம்.. அடுத்த 24 மணி நேரம் ரொம்ப முக்கியம்.. விழிப்புடன் இருங்கள்.. என ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்டு வேண்டுகோள் விடுத்துள்ளார் Read More


பாஜகவுக்கு 50 சீட்டுக்கு கீழ் கிடைத்தால் ஆச்சர்யமான விஷயம்....! 'டிவீட்' போட்டு 'ஷாக்' கொடுத்த சு.சுவாமி!

மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு 50 சீட்களுக்கு கீழ் கிடைத்தால் ஆச்சர்யமான விஷயம் என்று சுப்பிரமணிய சாமி மொட்டையாக பதிவிட்ட ஒரு 'டுவீட்' அக் கட்சியினரை சிறிது நேரத்தில் பதறச் செய்து விட்டது. கடைசியில் உ.பி. மாநிலத்தில் உள்ள 80 தொகுதிகளில் 50 ஐத் தான் குறிப்பிட்டேன் என்று கூறி சமாளித்துள்ளார் சு.சாமி Read More


சோதனை நடத்த வாருங்கள்...வருமான வரித்துறையை கிண்டல் செய்து ப.சிதம்பரம் 'டிவீட்'

தமக்கு சொந்தமான இடங்களில் எந்த நேரத்திலும், வருமான வரித்துறையினரின் சோதனை நடைபெறலாம் என்றும் அவர்களை வரவேற்க தயாராக இருப்பதாகவும் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் டிவிட்டரில் கிண்டலாக பதிவிட்டுள்ளார். Read More


குறைகளை வாட்ஸ் அப்பில் கூறச் சொன்ன கரூர் ஜோதிமணி ....நீங்க தான் பிரச்னை என வெளுத்த நெட்டிசன்ஸ்

கரூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி, தொகுதியில் உள்ள குறைகளை வாட்ஸ் அப்பில் தெரிவிக்குமாறு டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். Read More