காலித்தனம் செய்வது தான் ஜனநாயகமா..?அண்ணா அறிவாலயம் அனுமதிக்குமா..? மு.க.ஸ்டாலினுக்கு தமிழிசை சுளீர்

சேலத்தில் பாஜகவினரால் சமூக செயற்பாட்டாளர் பியூஸ் மனுஷ் தாக்கப்பட்டதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள தமிழக பாஜக தலைவர் தமிழிசை,அடுத்த கட்சி அலுவலகத்திற்குள் அனுமதியின்றி நுழைந்து வரம்பு மீறி கலாட்டா, காலித்தனம் செய்வதுதான் ஜனநாயகமா? இதையே அண்ணா அறிவாலயம் அனுமதிக்குமா? என காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். Read More


சேலத்தில் பியூஸ் மனுஷ் மீது தாக்குதல்; பாஜகவினரை கைது செய்ய சீமான் வலியுறுத்தல்

சேலத்தில் சமூக செயற்பாட்டாளர் பியூஸ் மனுஷ் மீது தாக்குதல் நடத்தியதற்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். தாக்குதல் நடத்திய பாஜகவினரை கைது செய்ய வேண்டும் எனவும் சீமான் வலியுறுத்தியுள்ளார். Read More


அடப்பாவமே... சொந்தக் கட்சி அமைச்சருக்கே சூன்யமா ? பியூஸ் மனுஷ்க்கும், பியூஸ் கோயலுக்கும் வித்தியாசம் தெரியலையா?

சேலத்தில் சமூக செயற்பாட்டாளர் பியூஸ் மனுஷ் மீது பாஜகவினர் நேற்று தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலை கொண்டாடும் விதமாக, பியூஸ் மனுஷ் என்பதற்குப் பதிலாக மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் பெயரைப் போட்டு பியூஸ் கோயலை துவைத்து எடுத்து விட்டார்கள் நம் இந்து அபிமானிகள்.. மிக்க சந்தோஷம்... என்று டுவிட்டரில் பதிவிட்டு சொந்தக் கட்சி அமைச்சருக்கே சூன்யம் வைத்துள்ளார் பாஜக அபிமானி ஒருவர். இந்தப் பதிவை பதி விட்ட அந்தப் புள்ளியை கேலியும், கிண்டலுமாக பாடாய்ப் படுத்தி வருகிறார்கள் நெட்டி சன்கள். Read More


எச்.ராஜா உதவியுடன் பலாத்கார குற்றவாளி நித்தியானந்தா சாமியார் வெளிநாட்டுக்கு தப்பி ஓட்டம்?

பலாத்கார வழக்கின் குற்றவாளி சாமியார் நித்தியானந்தா வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டதாக சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார். Read More