1890ஆம் ஆண்டு முதல், 2002 வருடம் வரையான காலகட்டத்தில் தமிழகத்தைத் தாக்கிய புயல்களின் எண்ணிக்கை 54.அதாவது 2002 முதல் 2018 வரையான 16 ஆண்டுகளில் மட்டும் 10 புயல்களைச் சந்தித்துள்ளது. புயல்களின் எண்ணிக்கை 30 சதவீதம் அதிகரித்துள்ளது.
சென்னையில் கொட்டும் மழையில் திமுக தலைவர் ஸ்டாலின், மக்களைச் சந்தித்து நிவாரணப் பொருட்களை வழங்கினார்.வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள நிவர் புயலானது இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலைக்குள் காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்கும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.
சென்னையில் இரண்டாவது நாளாகத் தொடரும் கனமழையால், பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கூரைகள் சரிந்து விழுந்துள்ளன.வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள நிவர் புயலானது இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலைக்குள் காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்கும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.
நிவர் புயல் காரணமாகச் சென்னையில் தமிழ்நாடு மின்வாரியம் சார்பில் மீட்பு நடவடிக்கைக்காகப் புயல் கட்டுப்பாட்டு உதவி மையம் இன்று முதல் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் 24 மணி நேரமும் தொலைப்பேசி மற்றும் அலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது
புயல் எச்சரிக்கையைக் குறிக்கும் விதமாகத் துறைமுகங்களில் ஏற்றப்படும் கூண்டு என்பது எண்களின் அடிப்படையில் தான் அளவிடப்படும் இதற்கு என்ன பொருள் என்று பலருக்கும் புரிவதில்லை.
நாடு முழுவதும் வரும் 14ம் தேதி தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. கொரோனா காரணமாக ஏராளமானோருக்கு வேலை இழப்பு, சம்பளக் குறைப்பு, போனஸ் ரத்து என்று பாதிக்கப்பட்டுள்ளதால், இந்த ஆண்டு தீபாவளி விற்பனை கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாகத் தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னையில் மழை பெய்து வருவதால், சேப்பாக்கம் மைதானத்தில் நாளை இந்தியா-மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
சென்னை மற்றும் திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.