இந்நிலையில் வெளிநாட்டில் ஈஸ்வரன் படத்தை ஒடிடியில் ரிலீஸ் செய்ய உள்ளார்கள் அதனால் தமிழ்நாட்டு தியேட்டரில் யாரும் இப்படத்தை ரிலீஸ் செய்ய வேண்டாம் என்று தியேட்டர் உரிமையாளர்கள் சங்க நிர்வாகி ஆடியோவில் பேசி தகவல் வெளியிட்டார்.
நடிகர் சிம்பு நடித்துள்ள படம் ஈஸ்வரன். இப்படத்தை சுசீந்திரன் இயக்கி உள்ளார். பொங்கல் தினமான 14ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டது.
சிம்பு நடித்துள்ள ஈஸ்வரன் படம் வரும் ஜனவரி 14ம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக வரும் 2ம் தேதி சென்னை ஆல்பட் தியேட்டரில் ஈஸ்வரன் படத்தின் ஆடியோ வெளியிடப்படுகிறது.
நடிகர் சிம்பு ஒன்றரை வருடத்துக்குப் பிறகு நடிக்க வந்தார். கொரோனா ஊரடங்கு தளர்வில் உடல் இளைக்கக் கடுமையான பயிற்சி செய்து 30 கிலோ குறைத்தார். பின்னர் சுசீந்திரன் இயக்கிய ஈஸ்வரன் படப்பிடிப்பிற்காகத் திண்டுக்கல் சென்று நடித்தார். சில நாட்களில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது