டிவி சேனல்களை அடுத்த பரிமாணமான ஓ.டி.டி. தளங்கள் தற்போது மிகவும் பிரபலமாகி வருகிறது. ஒரு இணைய இணைப்பும் டிவியில் இருந்தால் போதும் எந்த நிகழ்ச்சிகளையும் எந்த நேரத்திலும் கண்டுகளிக்க முடியும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் போலக் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் தான் குறிப்பிட்ட நிகழ்ச்சிகளைப் பார்க்க முடியும் என்ற கட்டுப்பாடு இதில் இல்லை.
ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் புதிய வாடிக்கையாளர்களை கவருவதற்காக ஒரு புதிய சலுகையை அறிவித்துள்ளது. இதன்படி 48 மணிநேரம் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
தமிழ் சினிமாவின் தரத்தை உலகளவில் உயர்த்தி பிடித்த நான்கு இயக்குநர்களான கௌதம் மேனன், சுதா கொங்கரா, வெற்றி மாறன், விக்னேஷ் சிவன் ஆகியோர் காதல், அந்தஸ்து, கௌரவம் என்கிற கருவை மையமாக வைத்து ஒரு ஆந்தாலஜி திரைப்படத்தைத் தமிழின் பெரு நட்சத்திரங்களின் நடிப்பில் நெட்ஃப்ளிக்ஸ்க்காக உருவாக்கி உள்ளார்கள்.
மொபைல் போன் பயனர்களை கவரும் வண்ணம் மாதம் ரூ.199 சந்தாவை நெட்ஃபிளிக்ஸ் அறிமுகம் செய்துள்ளது.