oilfield-investment-among-main-issues-during-pm-modis-russia-visit

எண்ணெய் துறையில் ரஷ்யாவுடன் உடன்பாடு: புடினுடன் மோடி சந்திப்பு

ரஷ்யாவிடம் எண்ணெய், ஹைட்ரோ கார்பன் வாங்கிக் கொள்வது தொடர்பாக இந்தியா ஒப்பந்தம் செய்யவுள்ளது. ரஷ்யாவின் கிழக்கு பிராந்திய பொருளாதார மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் மோடி, நாளை ரஷ்ய அதிபர் புடினை சந்தித்து பேசுகிறார். பிரதமர் மோடி, செப்.4, 5 தேதிகளில் ரஷ்யாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில் உள்ள விளாடிவோஸ்டாக் நகருக்கு செல்கிறார். அங்கு கிழக்கு பொருளாதார அமைப்பின் மாநாட்டில் தலைமை விருந்தினராக பங்கேற்று உரையாற்றுகிறார்.

Sep 3, 2019, 11:23 AM IST