கர்நாடக சட்டசபைக்கு வராத முதல்வர் மற்றும் ஆளும் கட்சி எம்எல்ஏக்கள் ; சபாநாயகர் கோபம்

கர்நாடக சட்டப்பேரவையில் இன்று மாலை 6 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில் முதல்வர் குமாரசாமி மற்றும் முக்கிய அமைச்சர்கள் உள்ளிட்ட பெரும்பாலான ஆளும் கட்சி எம்எல்ஏக்கள் இன்று சட்டசபைக்கு வரவில்லை.ஆளும் கட்சி தரப்பில் இருக்கைகள் காலியாக கிடப்பதைப் பார்த்த சபாநாயகர் கோபமடைந்து எச்சரிக்கை விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. Read More


கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு தாமதம்; திடீரென ஒத்திவைக்கப்பட்டதால் பரபரப்பு

கர்நாடக சட்டப்பேரவையில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவது தாமதமாகியுள்ளது. அதிருப்தி எம்எல்ஏக்கள் விவகாரத்தில், உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தொடர்பாக காங்கிரஸ் பிரச்னை எழுப்பி, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் சபையில் பெரும் கூச்சல், குழப்பம் ஏற்பட மதிய உணவு இடைவேளைக்காக பேரவையை சபாநாயகர் ஒத்தி வைத்தார். இதனால் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுமா? என்ற கேள்வியும் எழுந்து கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. Read More


'நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தப்புமா..?'- கர்நாடகத்தில் உச்சகட்ட பரபரப்பு

கர்நாடக சட்டப்பேரவையில் முதல்வர் குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று காலை 11 மணி நடைபெற உள்ள நிலையில், ஆட்சி தப்பிப் பிழைக்குமா? கவிழுமா? என்ற உச்சகட்ட பரபரப்பு கர்நாடக அரசியலில் நிலவுகிறது. Read More


'நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தயார்' கர்நாடக முதல்வர் குமாரசாமி அறிவிப்பு

சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தயார் என கர்நாடக முதல்வர் குமாரசாமி சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். Read More


'கர்நாடக அரசியல் குழப்பத்திற்கு இன்று முடிவு' முதல்வர் குமாரசாமி ராஜினாமா?

கர்நாடகத்தில் முதல்வர் குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசுக்கு நெருக்கடி முற்றி உச்சக்கட்டத்தை எட்டிவிட்டது. அதிருப்தி எம்எல்ஏக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பெரும்பான்மை பலம் இழந்து தவிக்கும் குமாரசாமி, வேறு வழியின்றி இன்று முதல்வர் பதவியை இன்று ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் சட்டப்பேரவையை கலைக்கவும் சிபாரிசு செய்வார் என்றும் கூறப்படுகிறது. Read More


நாங்கள் என்ன கேலிப் பொருளா..? எங்களை விமர்சிக்க நீங்கள் யார்..? மீடியாக்கள் மீது எகிறிய கர்நாடக முதல்வர்

மே 23-ந் தேதிக்குப் பிறகு கர்நாடகத்தில் கட்சி மாற்றம் நிகழப் போவதாக மீடியாக்கள் வெளியிட்ட செய்தியால் கொந்தளிப்புக்கு ஆளாகியுள்ளார் அம்மாநில முதல்வர் குமாரசாமி . எங்களை விமர்சிக்க நீங்கள் யார்? என்று ஆவேசமடைந்துள்ள குமாரசாமி, தொடர்ந்து எதிரான செய்திகளை வெளியிட்டால், சட்டம் கொண்டு வந்து மீடியாக்களை கட்டுப்படுத்தப் போவதாகவும் மிரட்டல் பாணியில் தெரிவித்துள்ளார் Read More


கர்நாடக அமைச்சர்கள், உறவினர்கள் வீடுகளில் வருமான வரி சோதனை - முதல்வர் குமாரசாமி தர்ணா போராட்டம்

கர்நாடக மாநில அமைச்சர்கள், அவர்களுடைய உறவினர்கள், நண்பர்கள் வீட்டில் நடந்த வருமானவரித் துறை சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து அம்மாநில முதல்வர் குமாரசாமி பெங்களூருவில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. Read More