ஜல்லிக்கட்டு போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைக்கும் சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு அரசு பணியில் முன்னுரிமை வழங்க வேண்டுமெனக் கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து அரசு பரிசீலனை செய்து வருகிறது. விவரித்து பல்வேறு கட்ட ஆய்வுகளை மேற்கொள்ளப்படுகிறது .
பாலியல் வல்லுறவு குற்றஞ்சாட்டும் பெண்ணின் சகோதரிக்கும் தனக்கும் இரண்டு பிள்ளைகள் இருப்பதாக மகாராஷ்டிரா மாநில சமூகநீதி துறை இணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சன் நியூஸ் சேனலின் மைக்கை தூக்கி வீசிய சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் கவர்னர் கிரண்பேடியை மாற்ற கோரி முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் இரு நாட்களாக நடந்த தொடர் போராட்டம் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
புதுவையில் நாளை முதல்வர் தலைமையில் நடக்கும் போராட்டத்தில் மாணவர்கள் பங்கேற்பதை தவிர்க்க காவல்துறை புதிய உத்தியை கையாண்டுள்ளது.
கேரள மாநிலம் தற்போது தொற்று நோய்களின் கூடாரமாக மாறி வருகிறது. ஏற்கனவே கொரோனா வைரஸ் பீதியை ஏற்படுத்தி உள்ள நிலையில், ஷிகெல்லா வைரஸ், உருமாறிய கொரோனா வைரஸ், பறவை காய்ச்சல் என அடுத்தடுத்து கொள்ளை நோய்கள் பரவி வருகின்றன.
கோயில் சிலைகளை சேதப்படுத்துவதன் மூலம் திட்டமிட்டு, ஒரு அரசியல் கொரில்லா போர் நடக்கிறது என்று ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மறைமுகமாக பாஜகவை தாக்கியுள்ளார்.
கவர்னரை எதிர்த்து போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்துள்ள முதல்வர் நாராயணசாமியை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறை கைது செய்ய வேண்டும் என அதிமுக சட்டமன்ற கட்சித்தலைவர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் கவர்னர் கிரண்பேடிக்கு எதிராக முதல்வர் நாராயணசாமி நடத்தவுள்ள போராட்டத்தை தொடர்ந்து பாதுகாப்பு பணிக்காக 5 கம்பெனி துணை ராணுவம் வரவுள்ளது.
கேரளாவில் இங்கிலாந்திலிருந்து வந்த 6 பேருக்கு உருமாறிய கொரோனா வைரஸ் பரவி இருப்பதால் பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்று அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சைலஜா தெரிவித்துள்ளார்.