Jun 6, 2019, 10:05 AM IST
பயனர் கவனம் தப்பினால் சமூக ஊடக செயலியான இன்ஸ்டாகிராம் அதிக மொபைல் டேட்டாவை பயன்படுத்திவிடக்கூடும். சரியான தொடர்பு மற்றும் போதுமான வேகம் இல்லாத இணைப்பில் படங்களை தரவிறக்கம் செய்வதற்கு இன்ஸ்டாகிராமில் அதிக நேரம் பிடிக்கிறது. இணைப்பின் வேகம் மற்றும் தரம் குறைந்த இடங்களிலும் தடையில்லாமல் செயல்படுவதற்கு வசதியாக டேட்டா சேமிப்பு (சேவர்) என்ற சிறப்பம்சத்தை இன்ஸ்டாகிராம் அறிவித்துள்ளது. ஆண்ட்ராய்டு இயங்குதள பயனர்கள் மட்டுமே இந்த வசதியை பெற இயலும். Read More