Apr 16, 2019, 20:39 PM IST
வேலூர் மக்களவைத் தொகுதியில் தேர்தலை ரத்து செய்தது ஜனநாயகப் படுகொலை என்றும், இந்தத் தேர்தலில் பிரதமர் மோடிக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்று திமுக பொருளாளர் துரைமுருகன் ஆவேசமாக தெரிவித்துள்ளார். Read More
Apr 16, 2019, 20:24 PM IST
வேலூர் தொகுதியில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், அத்தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்ததை ஏற்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்திய தேர்தல் வரலாற்றில் பட்டுவாடா புகாரின் பேரில் மக்களவைத் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்படுவது இதுவே முதல் தடவையாகும். Read More
Apr 16, 2019, 10:40 AM IST
வேலூர் தொகுதியில் தேர்தலை ரத்து செய்வது தொடர்பாக இதுவரை எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என தலைமை தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது Read More
Apr 16, 2019, 09:39 AM IST
வேலூர் தொகுதியில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், அத்தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய ஜனாதிபதிக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் தேர்தல் நடக்குமா? நடக்காதா? என்ற உச்சகட்ட குழப்பத்தில் அத்தொகுதி அரசியல் கட்சியினரும், வாக்காளர்களும் உள்ளனர். Read More
Apr 12, 2019, 10:48 AM IST
வேலூர் தொகுதியில் தேர்தல் நடக்குமா? ரத்தாகுமா? என்ற திக்.. திக்.. பதற்றத்திலேயே நாட்கள் கடந்து போகும் நிலையில் இன்று உறுதியான முடிவு தெரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது Read More
Apr 7, 2019, 18:13 PM IST
திமுக பிரமுகர்களுக்குச் சொந்தமான வீடு, பள்ளி, கல்லூரிகளில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் பல கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், வேலூர் மக்களவைத் தொகுதியில் தேர்தல் நடைபெறுமா? அல்லது ரத்தாகுமா? என்பது பற்றி தலைமை தேர்தல் ஆணையம் நாளை முடிவு செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. Read More