நாய் வேஷம் சுரேஷ்... டுபாக்கூர் கம்பெனி பாலாஜி - பிக் பாஸ் பஞ்சாயத்து ...!

by Mahadevan CM, Oct 11, 2020, 10:41 AM IST

ஆண்டவர் வருகை. சோத்துல உப்பு போட்டு திங்கறவரையும், எதிர்பாராம கேப்டன் ஆகிட்டு, அதிகாரத்தை பயன்படுத்தாம வேடிக்கை பார்க்கறவரையும் தட்டி கேப்போம் வாங்கனு அறிமுகமானார் ஆண்டவர். உடனடியா வெள்ளிக்கிழமை நிகழ்வுகள்.

காலைல வெறித்தனம் பாட்டு. அது பாட்டுக்கு பாட, இவங்க பாட்டுக்கு ஆடினாங்க. இந்த மாலைக்கண் நோய் இருக்கிறதா மாதிரி காலைக்கண் நோய் ஏதாவது இருக்கா? காலைல டான்ஸ் ஆடும் போது மட்டும் அந்த கண்றாவி கண்ணாடியை கழட்டவே மாட்டேங்கறாங்க ரம்யா.... தேவுடா...

பொழுது விடுஞ்சுடுச்சே இன்னும் ஒன்னும் நடக்கலையேனு யோசிச்சுட்டு இருக்கும் போதே, ரம்யா, சனம், ஷிவானி ஆஜித் எல்லாரையும் உக்கார வச்சு மாடலிங் ஷோ நடத்தறதை பத்தியும், அவங்களுக்கு ட்ரைனிங் கொடுக்கறதை பத்தியும் பேசிட்டு இருக்கும் போது, சனம் வேலை பார்த்த கம்பெனியை பத்தி டுபாக்கூருனு பாலாஜி சொல்லவும் பஞ்சாயத்து இனிதே தொடங்கியது. சனம் கிட்ட இருக்கற ஒரு மிகப்பெரிய பிரச்சினை அவங்க செய்யற விவாதங்கள் முடிவில்லாதவையா இருக்கு, தொடர்ந்து பேசிட்டே இருக்காங்க. ஆனா எந்த பாயிண்டும் இல்லை. அந்த கம்பெனியை பத்தி சொன்னது என்னோட ஒபீனியன், அதுக்கும் உங்களுக்கும் சம்பந்தமில்லைனு பாலாஜி தெளிவா சொல்லியும், சனம் கேக்கறா மாதிரி இல்லை. முதல் விஷயம் சனம் அந்த கம்பெனில மாடலிங் செஞ்சுருக்காங்கனு பாலாஜிக்கு தெரியாதுனு அவரே சொல்றாரு. ஆனா அதை கணக்குல எடுத்துக்குவே இல்லை சனம். இதுல ரம்யாவை வேற சாட்சிக்கு கூப்பிட்டாங்க. அதுவும் பாலாஜிக்கு சாதகமா தான் இருந்தது. அப்பவும் விடலை சனம்.

கேப்டனை பத்தி நிறை, குறை எழுதி புகார் பெட்டில போட சொல்லி ஓலை வந்தது. எல்லாரும் ஆவலா எழுதி போட்டாங்க. இதுலேயும் அனிதாவை சுட்டிகாட்டி சுரேஷ் கமெண்ட் அடிச்சது மோசமான முன்னுதாரணம். அதாவது அனிதாவை பத்தி இங்க யாருக்கும் தெரியல, எனக்கு தான் தெரியும். ஒருநாள் நீங்க புரிஞ்சுக்குவீங்கனு டைம் கிடைக்கும் போதெல்லாம் சொல்லிட்டு இருக்காரு. ஏதோ ஒரு விதத்துல அனிதாவை பழி வாங்கற வரைக்கும் சுரேஷை மாத்த முடியாதுனு நினைக்கிறேன். அப்பதான் அவர் மனசு சாந்தி அடையும். தன்னை பத்தி தான் எழுதறாங்கனாலும் ரொம்ப ஜாலியா இருந்தாங்க ரம்யா....

மீண்டும் ஆண்டவர்

அகம் டிவி வழியே உள்ள போறதுக்கு முன்னாடி ஹவுஸ்மேட்ஸ் என்ன செய்யறாங்கனு பார்த்தாரு.

ஷிவானியை பாடச்சொல்லி கேட்டது மத்த ஹவுஸ்மேட்ஸுக்கு தெரியனும்னு இருக்கலாம். ஷிவானியும் நல்லா பாடினாங்க.

சோத்துல உப்பு, செத்தாலும் மூஞ்சில முழிக்க மாட்டேன் இப்படி அவசரத்துல, கோபத்துல வார்த்தையை விடாதீங்கனு சுரேஷுக்கு அட்வைஸ் செஞ்சாரு. அவரு அதை கேட்டதுக்கு அப்புறமும் "நாய் வேஷம் போட்டா குறைச்சு தான் ஆகனும்னு"(கொஞ்சம் லேட்டா) ஆண்டவர் கிட்டயே சொன்னது தான் அல்டிமேட். அப்ப ஆண்டவர் முகத்துக்கே க்ளோசப் வச்ச எடிட்டிங் டீமுக்கு சபாஷ்...

கடந்து வந்த பாதைல எல்லாரும் சொன்ன கதைக்கு அவரோட பாணில கருத்து சொன்னாரு. வேல்முருகனுக்கு காமராஜரை நுழைத்து நன்றி சொன்னது அக்மார்க் கமல்தனம். நிஷாவையும் பாராட்டினாரு. தன்னோட அம்மா இறக்கும் போதும் தானும் நடிச்சுட்டு தான் இருந்ததா சொல்லி ஆரிக்கு ஆறுதல் சொன்னாரு. பாலாஜியோட கதையை குறிப்பிட்டு பாலாஜி சொன்னது டார்க் ஸ்டோரினாலும் அதுல இருக்கற வெளிச்சமே நீங்க தான்னு சொன்னது கமல் டச்.

மிடில் கிளாஸ், லோயர் மிடில் கிளாஸ் பங்களிப்பு இந்த முறை நிறைய இருக்குனு சொன்னாரு. இருந்தாலும் நிறைய இடங்கள்ல ஆண்டரோட பேச்சு நறுக்குனு இல்லை. இன்னுமே கொஞ்சம் வழாவழா கொழாகொழா தான். ஆனா ஒருத்தர்கிட்ட இருந்து இன்னொருத்தருக்கு போக அவர் எடுத்த லீடெல்லாம் பட்டாசு ரகம். எச்சில் மேட்டருக்கு சுரேஷுக்கு வச்ச சூடு செம்ம....

நிகழ்ச்சி சுவாரஸ்யம், கமலை, அவரோட பேச்சை ரசிச்சது எல்லாமே சுரேஷ்-அனிதா சண்டை ஆரம்பிக்கற வரைக்கும் தான். அதுக்கப்புறம் கமல் சாரே நெளிஞ்சா மாதிரி தான் நம்மளும். முதல்ல சுரேஷ்-அனிதா சம்பவம். மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிச்சு, ரெண்டு பேரும் விளக்கம்சொல்லி, ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து, ஷப்பா..... முடியல.... சுரேஷ் பேசும் போது தன்னோட அதிருப்தியை அப்பட்டமா வெளிப்படுத்தினது அனிதாவோட முதிர்ச்சியின்மை. கமல் அவ்வளவு தூரம் சொன்னதுக்கு அப்புறமும் டக்குனு முடிச்சு, ஓக்கே சார் இனிமே பார்த்துக்கறோம்னு ரெண்டு பேரும் சொல்லலை. சுரேஷ் ஒரு படி மேல போய் நாய் வேஷம் போட்டாகுறைச்சு தான் ஆகனும்னு கமல் முன்னாடியே சொன்னது, கமலையும் பழைவாங்கறாரோனு தான் தோணுச்சு.

ஒரு வழியா அந்த பிரச்சினைல இருந்து வெளிய வந்தார். அடுத்த டாஸ்க்கா இன்னொரு தடவை ஹார்ட், ஹார்ட் பிரேக் ஸ்டாம்ப் கொடுக்கற வாய்ப்பு. முதல்ல வந்த சனம் ரேகாவுக்கும், அனிதாவுக்கும் ஹார்ட் கொடுத்துட்டு, பாலாஜிக்கும், சம்யுக்தாவுக்கும், ஹார்ட் பிரேக் கொடுத்தாங்க. அப்புறம் கமல் சார் முன்னாடியே சனம்-பாலாஜி பஞ்சாயத்து மறுபடியும் ரிப்பீட்டு. அதை முடிப்பாங்கனு பார்த்தா, ம்கூம், வாய்ப்பே இல்லை. ஒன்னுமே இல்லாத விஷயத்தை பேசிட்டே இருக்காங்க சனம். அதை கட் பண்ணி எறிஞ்சுருக்கலாம். இதுல ஸ்கெட்ச் யாருக்குனு தான் தெரியல. சனம்+பாலாஜிக்கா இல்ல கமல் சாருக்கானு நாளைக்கு தான் பார்த்து சொல்லனும். இன்னிக்கு ஆண்டவர் தான் காப்பாத்தனும்.

Get your business listed on our directory >>More Bigg boss News

அதிகம் படித்தவை