பிக் பாஸ் வெளியேற்றத்திற்கு பிறகு டம்மி மம்மி சம்யுக்தாவின் நிலை! வைரலாகும் புகைப்படங்கள்..

by Logeswari, Nov 30, 2020, 17:55 PM IST

தமிழில் பிக் பாஸ் மூன்று சீசன்களை கடந்த நிலையில் அக்டோபர் மாதம் நான்காவது சீசன் சமூக நெறிகளை கடைப்பிடித்து மிக பிரம்மாண்டமாக அரங்கேறியது. போட்டியாளர்களை ஒரு மாதம் தனிமையில் வைத்து கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டு நெகடிவ் வந்த பிறகே இந்நிகழ்ச்சிக்கு போட்டியாளர்களை உறுதி செய்தனர். வழக்கம் போல் பத்மஸ்ரீ கமலஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்கினார். பிக் பாஸ் வீட்டில் நுழைந்து இரண்டு வாரங்கள் ஆகியே சம்யுக்தா மற்ற போட்டியாளர்கிடம் நன்றாக பழக தொடங்கினார்.

"இந்த பூனையும் பால் குடிக்குமா" என்று போல் அமைதியாக இருந்த சாம் இரண்டு வாரத்திற்கு பிறகு அவரது கை பிக் பாஸ் வீட்டில் மிக அதிகமாக ஓங்கி இருந்தது. அவரை சுற்றி எப்பொழுதும் ஒரு குரூப் இருக்கும். யாரென்றால் ஷிவானி, பாலாஜி, ஆஜித் எப்பொழுதாவது தேவைப்பட்டால் சிரிப்பழகி ரம்யாவை சேர்த்து கொள்வார். இவர்கள் சேர்ந்து பல போட்டியாளர்களை முதுகுக்கு பின்னால் புரளி பேசியுள்ளனர். சின்ன சின்ன சண்டை என்று சென்ற நிலையில் நீதிமன்ற டாஸ்கில் ஆரி மற்றும் சம்யுக்தாவிற்கு சண்டை பயங்கரமாக சூடுபிடிக்க தொடங்கியது. மீண்டும் அள்ள முடியாத வார்த்தைகள் என்று தெரிந்தும் இருவரும் சரமாக பகிர்ந்து கொண்டு இருந்தனர்.

அப்பொழுது தான் பிக் பாஸ் நடத்திய கால் சென்டர் டாஸ்கில் 'வளர்ப்பு' பிரச்சனை வெடித்தது. இதை தொடர்ந்து சனமை 'கலீஜ்' என்ற பெயரை கொண்டு அவமான படுத்தினார். ஆகமொத்தம் பிக் பாஸ் வீட்டில் தவறான வார்த்தைகளை பயன்படுத்தியவர்களின் பட்டியலில் முதல் இடத்தை பிடித்திருப்பது நமது 'டம்மி மம்மி சம்யுக்தா' தான். அதே சமயம் பிக் பாஸ் வீட்டில் மன தைரியம் கொண்ட பெண்மணியாக இருந்துள்ளார். அதை அவர் எங்கேயும் விட்டு கொடுக்காமல் 56 நாள் சக போட்டியாளர்களுடன் மல்லு கட்டியுள்ளார் என்பது மிகவும் பாராட்டிற்குரிய ஒரு விஷயம்.

அவரது கண்களில் இருந்து சிந்திய கண்ணீர் துளிகள் யாவும் அவரது செல்ல மகனுக்கு மட்டுமே உரியவை. இந்நிலையில் கடந்த வாரம் மக்களால் குறைந்த வாக்குகளை பெற்று பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். அப்பொழுது சம்யுக்தாவை அவரது குடும்பத்தினர் இனிதே வரவேற்றனர். 56 நாள் கழித்து சம்யுக்தா மீண்டும் வீட்டுக்கு திரும்பியதால் கேக் வெட்டி சந்தோசமாக அவரது பெற்றோர், உறவினர்கள் என அனைவரும் கொண்டாடினர். அவரது அம்மா, அப்பா இருவருடன் புகைப்படம் எடுத்து கொண்டார். அவரது பெற்றோர் சம்யுக்தாவுக்கு கேக்கை சந்தோசமாக ஊட்டி மகள் வீட்டுக்கு திரும்பி வந்ததை மிக விமர்சியாக கொண்டாடினர். அவரது பையன் ராயன் குட்டியை இறுக்கி கட்டி பிடித்து போட்டோவுக்கு போஸ் கொடுத்திருந்தார்.

More Bigg boss News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

Previous
Next

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை