அமேசானில் ஸ்மார்ட்போன்ளுக்கு அதிரடி ஆஃபர் மழை..!

by Isaivaani, Jan 22, 2018, 10:21 AM IST

ஷாப்பிங் என்றாலே குஷிதான். அதிலும், ஆன்லைன் ஷாப்பிங் என்றால் சொல்லவே வேண்டாம் குஷியோ குஷி. அதுவும் பிரபல ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் பொருட்கள் மீது அதிரடி ஆஃபர்களை அறிவித்தால் போதும் செல்போன் கையுமாக இளசுகள் சுற்றி வருகின்றனர்.
அப்படியொரு அதிரடி ஆஃபர்களை தான் பிரபல ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான அமேசான் அறிவித்துள்ளது. ஆடைகள் முதல் ஸ்மார்ட்போன்கள் வரை அனைத்திலும் வாடிக்கையாளர்கள் இன்பதிர்ச்சியடையும் அளவிற்கு ஆஃபர்களை குவித்துள்ளனர்.
சரி, ஸ்மார்ட்போன் பிரியர்களே அமேசானில் ஸ்மார்ட்போன்களுக்கு வழங்கியுள்ள ஆஃபர்களை பற்றி இங்கு பார்ப்போம்..

ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போனின் 64 ஜிபி மாடல் வெறும் ரூ.10,999க்கு கிடைக்கிறது. சந்தையில் புதிதாக அறிமுகமாகி பிரபலமடைந்து வரும் ஹானர் 9 லைட் மற்றும் ஸ்மார்ட்ரான் டி.போன் பி ஆகிய இரண்டு மாடல் ஸ்மார்ட்போன்களும் விற்பனைக்கு வருகின்றன. வெறும் ஆயிரம் ரூபாய்க்கு 18:9 திரை, 2 ஜிபி ரேம், டூயல் கேமரா உள்ளிட்ட வசதிகள் கொண்ட ஐவூமி ஐ 1 என்ற போன் அமேசானில் கிடைக்கிறது.

இங்கு, ஸ்மார்ட்போன்களுக்கான அதிரடி எக்ஸ்சேன்ஜ் ஆப்பர்களும் வழங்கப்பட்டுள்ளன. ஓப்போ நிறுவனத்தின் எப்3 மற்றும் எப்3 ப்ளஸ் ஆகிய இரண்டு மாடல்களுக்கு மொபைலை எக்ஸ்சேன்ஜ் செய்யும்போது குறைந்தபட்சம் 5000 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதனால், எக்ஸ்சேன்ஜ் பட்டியலில் இருக்கும் எந்த மொபைலாக இருந்தாலும் ரூ.5000 நிச்சயம் கிடைக்கும்.

மேலும், சாம்சங் கேலக்சி ஆன் நெக்ஸ்ட் மாடல் ஸ்மார்ட்போனின் சந்தை விலையில் ரூ.1000 குறைக்கப்பட்டு ரூ.9999க்கு கிடைக்கிறது. இதேபோல், மோட்டோ இ4 ப்ளஸ் ஸ்மார்ட்போனுக்கு ரூ.500 குறைக்கப்பட்டு ரூ.9,499க்கு கிடைக்கிறது. லினோவோ கே8 ப்ளஸ் ஸ்மார்ட்போன் ரூ.8,999க்கு கிடைக்கிறது.

லினோவோ கே8 நோட் 4ஜிபி ரேம் மாடல் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்தபோது ரூ.13999ஆக இருந்தது. இது தற்போது அமேசானில் ரூ.10999க்கு கிடைக்கிறது.
இதுபோல், ஸ்மார்ட்போன்களுக்கு மட்டுமின்றி டேப், லாப்டாப், எல்இடி, எல்சிடி டிவி உள்பட வீட்டிற்கு தேவையான அனைத்து பொருட்கள் மீதும் அமேசானில் அதிரடி ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

More Business News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அதிகம் படித்தவை