கூகுள் நிறுவனத்தின் கூகுள் பே செயலி உரிய லைசென்ஸ் பெற்று இயங்குகிறதா? இல்லையா? என்ற கேள்வியை டெல்லி உயர்நீதிமன்றம் ரிசர்வ் வங்கியிடம் கேள்வி எழுப்பியுள்ளது.
டெல்லியைச் சேர்ந்த அபிஜித் மிஸ்ரா என்பவர் தொடுத்த பொதுநல வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் இந்த கேள்வியை எழுப்பியுள்ளது. மேலும், இதுகுறித்த விளக்கத்தை கூகுள் நிறுவனமும் ரிசர்வ் வங்கியும் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
Payment and Settlement Act 2007, பிரிவு 4-ன் கீழ் கூகுள் இந்தியா டிஜிட்டல் நிறுவனத்தின் சார்பில் செயல்படும் GooglePay செயலி அங்கீகாரம் இன்றி இயங்குகிறது என்று கடந்த மார்ச் 20-ம் தேதி ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உரிய அங்கீகாரம் பெறாமல், விதிகளுக்குக் கட்டுப்படாமல், எந்த தனி மனிதரும், நிறுவனமும் பணம் பரிமாற்றம் இயக்கத்தை செயல்படுத்த முடியாத நிலை இருக்கும் போது, கூகுள் பே நிறுவனம் மற்றும் எவ்வாறு பணப்பறிமாற்றம் செய்கிறது என தனது மனுவில் அபிஜித் மிஸ்ரா குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி தலைமை நீதிபதி ராஜேந்திர மேனன், நீதிபதிகள் அனுப் ஜெயராம் பம்பானி அடங்கிய அமர்வு, கூகுள் பே எவ்வாறு செயல்படுகிறது என்றும், உரிய லைசென்ஸ் பெற்று இயங்குகிறதா? இல்லையா? என்பது குறித்து கூகுள் இந்தியா மற்றும் ரிசர்வ் வங்கி விளக்கமளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளது.