பெண் குழந்தைகளுக்கான அஞ்சல் துறையின் சுகன்யா சம்ரிதி திட்டம் (SSA) என்றால் என்ன...அதை எப்படி விண்ணப்பிப்பது?

What is SSA Scheme and Its Benefits

by Loganathan, Aug 26, 2020, 14:32 PM IST

பெண் குழந்தைகள் 18 வயது பூர்த்தியடைந்த பின் அவர்களுக்கான மேற்படிப்பு , திருமணம் போன்ற தேவைகளுக்காகவும், பெற்றோர்களின் சுமையை நெகிழ வைப்பதற்காகவும் நமக்கு சேமிப்பு இன்றியமையாததாக இருக்கும். அதற்காக பயன்படும் ஒரு முக்கிய சேமிப்புத் திட்டம்தான் அஞ்சல் துறையின் சுகன்யா சம்ரிதி திட்டம் ( Sukanya Samriddhi Account ).

SSA திட்டம் என்றால் என்ன?

சுகன்யா சம்ரிதி திட்டம் என்பது பிரத்யேகமாக பெண் குழந்தைகளுக்கான சேமிப்பு திட்டம் மட்டுமே . இதில் பெண் குழந்தைகள் 10 வயதை பூர்த்தியடைவதற்கள் இந்த திட்டத்தில் சேர வேண்டும்.

வட்டி மற்றும் செலுத்து தொகை

இந்த திட்டத்தில் ஒரு பெண் குழந்தைகளுக்கு ஒரு கணக்கு மட்டுமே திறக்கப்படும். பெண் குழந்தையின் பெற்றோர் அல்லது சட்டரீதியான பாதுகாவலர்கள் கணக்கை தொடங்கலாம்.

* ஒரு பாதுகாவலர் அதிகபட்சமாக இரு கணக்குகளை தொடங்கலாம் இரண்டு பெண் குழந்தைகளுக்காக.

* 01.04.2020 விருந்து வட்டியானது ஆண்டிற்கு 7.6 % நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

*வட்டியானது ஆண்டின் இறுதியில் கணக்கிடப்பட்டு செலுத்தப்படும் .

* ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் 250 முதல் 50 ன் மடங்காக பணத்தை செலுத்தலாம் அதிக பட்சம் ஒரு நிதியாண்டிற்கு 1,50,000 மட்டுமே.

*குறைந்பட்சமான ரூபாய் 250 ஒரு நிதியாண்டில் செலுத்தவில்லை என்றால் அதற்கான தண்டனை தொகையாக 50 செலுத்த வேண்டும்.

முதிர்வு காலம்

கணக்கை தொடங்கிய நாளிலிருந்து 21 ஆண்டுகள் இதன் முதிர்வு காலமாகும் .பெண் குழந்தை 18 வயதை பூர்த்தியடைந்த பின் இருப்புத் தொகையில் இருந்து 50% பணத்தை எடுத்து கொள்ளலாம். பெண்ணின் திருமணத்திற்கு 1 மாதத்திற்கு முன்பாகவோ அல்லது திருமணத்திற்கு பின் 3 மாதங்களுக்குள் கணக்கை முடித்து பணத்தை பெறலாம் . ஆன்லைன் மூலம் பணம் செலுத்துவதற்கான வழிமுறைகளும் உள்ளன.

More Business News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை