ஒவ்வொரு சாமானியனும் வயது முதிர்ச்சியடையும் போது மற்றவரை சார்ந்து வாழ வேண்டிய நிர்பந்தத்துக்கு உள்ளக்கபடுகிறார்கள். முதுமை வாழ்வு என்பது பல நேரங்களில் கசப்பான நினைவுகளையே சுமக்க வைக்கிறது இதற்கு பிரதான காரணம் பொருளாதார ரீதியாக நாம் மற்றவர்களை சார்ந்து வாழ்வதால் மட்டுமே எனவே 60 வயதை தாண்டியவர்கள் தங்களுக்கான வருவாயை ஏற்படுத்தினால் சுதந்திரமாக யாரையும் சாராமல் வாழலாம் . இதற்காக இந்திய அஞ்சல் துறையில் மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம் ( Senior Citizen Savings Scheme ) உள்ளது .
SCSS திட்டம் என்றால் என்ன ?
இந்திய அஞ்சல் துறை மூலம் நடைமுறையில் உள்ள ஒரு சேமிப்பு திட்டம் தான் SCSS .
* இந்த திட்டத்தில் 60 வயது நிரம்பிய அல்லது அவ்வயதை தாண்டிய தனிநபர் எவரும் இந்த திட்டத்தில் சேரலாம் .
* தனி நபராகவே அல்லது மனைவியுடன் சேர்ந்து கூட்டு கணக்கையும் தொடரலாம் .
* அரசு பணியில் உள்ளோர் பணிநிறைவு பெற்ற ஓர் ஆண்டுக்குள் இந்த திட்டத்தில் சேர வாய்ப்பு உண்டு .
* விருப்ப ஓய்வு பெற்றவர்களும் இந்த திட்டத்தில் ஓர் ஆண்டுக்குள் இந்த திட்டத்தில் சேரலாம்.
வட்டி விகிதம் மற்றும் முதிர்வு காலம்
மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டத்தின் வட்டி விகிதமானது 01.04.2020 விருந்து 7.4 சதவிகிதமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மற்றும் வட்டியானது ஒவ்வொரு காலாண்டுக்கும் கணக்கிடப்பட்ட செலுத்தப்படுகிறது .
இந்த திட்டத்திற்கான முதிர்வு காலம் என்பது சேமிப்பு திட்டம் தொடங்கிய நாளிலிருந்து 5 ஆண்டுகள் ஆகும்.
எவ்வளவு தொகை செலுத்த வேண்டும் ?
மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டத்தில் சேர விரும்புவோர் 1000 த்தின் மடங்காக திட்டத்தில் சேமிப்பு தொகை செலுத்தலாம் ஆனால் அந்த தொகை 15,00,000 தாண்ட கூடாது .
ஒருவர் எத்தனை சேமிப்பு கணக்கை வேண்டுமானாலும் தொடங்கலாம் ஆனால் சேமிப்பு தொகையின் கூட்ட மதிப்பு 15,00,000 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
அதிகபட்சமாக 1 இலட்சம் வரை பணமாக செலுத்தி சேமிப்பு கணக்கை தொடங்கலாம் அதற்கு மேல் காசோலை மூலம் மட்டுமே செலுத்த முடியும்.
நிபந்தனைகள்
ஒரு முறை மட்டுமே பணம் செலுத்தி அதன் மூலம் வரும் வட்டியை வருமானமாக பெறலாம்.
கணக்கை முன் கூட்டியே முடிப்பதற்கான வாய்ப்பும் உண்டு .
கணக்கு தொடங்கிய ஓர் ஆண்டிற்குள் முடித்தால் வட்டி ஏதும் வழங்கப்படாது , வட்டி செலுத்தப்பட்டிருந்தால் இருந்தால் அது திரும்பப் பெறப்படும்.
கணக்கை தொடங்கி ஒர் ஆண்டிற்கு பின் நிறைவு செய்தால் செலுத்து தொகையில் ( deposited amount ) 1.5% பிடித்தம் செய்யப்படும்.
கணக்கை தொடங்கி இரண்டு ஆண்டிற்கு பின் முடித்தால் செலுத்து தொகையில் 1% பிடித்தம் செய்யப்படும்.
நீட்டிப்பு
முதிர்வு காலத்திற்கு பின் ஒர்ராண்டுக்குள் தேவைப்பட்டால் கணக்கை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிப்பு செய்யலாம் . இல்லையென்றால் கணக்கை முடித்து கொள்ளலாம்