நிதிச்சுமை உங்கள் மனச்சுமையை அதிகரிக்கிறதா..?

by Rahini A, Mar 20, 2018, 09:00 AM IST

இன்றைய பணிச்சூழலால் ஒவ்வொரு குடும்பத்திலும் பொருளாதார நெருக்கடி, நிதிச்சுமை ஆகியவை எல்லாம் தவிர்க்க முடியாதது ஆகி வருகிறது.

பணியிட சூழல், குடும்ப நிர்வாகம், விலைவாசி என நம் வீட்டுப் பொருளாதாரம் ஆட்டம் காணும்போது இந்த நிதிச்சுமை நம்மை அழுத்தத் தொடங்குகிறது. இது பொருளாதார ரீதியாக மட்டும் பாதிக்காமல் நமது உடல் நலனையும் மன நலனையும் பாதிப்பதுதான் பெரும்பாலாமோருக்கு இன்று பிரச்னை.

பணம்… பணம் என இரவு பகல் பார்க்காமல் ஓடுகிறோம். கிரெடிட் கார்டு பில் கையைக் கடிக்கும் போதுதான் பணத்தை அள்ளிவீசிய நமக்குள் இருக்கும் வள்ளலை உணருவோம். அமெரிக்க மனநல சங்கம் சமீபத்தில் நடத்திய ஓர் ஆய்வில், ‘100-க்கு 72 பேர் பண சார்ந்த பிரச்னைகளால் மன அழுத்தத்துக்கு உள்ளாகியுள்ளனர்’ என்ற தகவலை வெளியிட்டுள்ளது.

இது அமெரிக்கர்களை மட்டும் தாக்கும் அழுத்தம் அல்ல, இன்றைய சூழலில் சம்பாதிக்கும் அனைவருக்கும் ஏற்படும் தாக்கம். பணம் சார்ந்த நிதிச்சுமை நமக்கு மன அழுத்தமாக உருவாகி அதுவே தூக்கத்தைப் பாதித்து உடல்நலத்தையும் கேள்விக்குறியாக்கிவிடுகிறது.

பொருளாதார சுமை நம்மை எப்படியெல்லாம் தாக்கும் என்பதை பார்க்கலாம்:

  1. பணம் சார்ந்த கவலைகள் நம் உடல் நலனை அதிகளவில் பாதிக்கும்.
  2. கவலையை மறக்க சிலர் சிகரெட், குடி என இறங்கும் போது அது மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தும்.
  3. பணப்பற்றாக்குறையை சமாளிக்க அத்தியாவசிய செலவுகளைக் கூடக் குறைக்கத் தொடங்குவோம். சின்ன காய்ச்சல் எனக் கண்டுகொள்ளாமல் இருந்து அது பின்னர் பெரிதாக உருவானால், பொருளாதரம் மட்டுமில்லை உடல்நலமும் பாதிக்கும்.
  4. பணம் சார்ந்த பிரச்னை முதலில் நமது தூக்கத்தில்தான் எதிரொலிக்கும். தூக்கம் பாதித்தாலே நோய் எதிர்ப்பு சக்தி குறையும், அறிவாற்றல் மழுங்கும். இதுவே கூடுதல் சுமையாகும்.
  5. செலவுகளை சமாளிக்க கிரெடிட் கார்டு பயன்படுத்தத் தொடங்கினால், அளவு தெரியாது. கடன் அதிகரித்தாலே கவலை, பயம், நம்பிக்கையின்மை எல்லாம் அடுக்கடுக்காகக் குவியத்தொடங்கிவிடும். இது நம்மை நாமே வெறுக்கும் சூழலை உருவாக்கும்.

ஆக, பணத்தின் தேவை குறையும்போது மன அழுத்தமும் குறையும். வேலைப்பளுவை எப்படியெல்லாம் நீக்கலாம் என பயிற்சி எடுத்துக்கொள்ளுங்கள். வாழ்க்கை வளமாகும்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading நிதிச்சுமை உங்கள் மனச்சுமையை அதிகரிக்கிறதா..? Originally posted on The Subeditor Tamil

More Business News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை