மழையில் கரைந்துபோகும் தங்கத்தின் விலை! இன்றைய தங்கத்தின் விலை 23-10-2020

Todays gold rate 23-10-2020

by Loganathan, Oct 23, 2020, 12:09 PM IST

பங்குச்சந்தை இந்த வாரத்தின் முதல் நாளில் இருந்து ஏற்ற இறக்கத்துடன் முடிவடைந்தது. நேற்றும் சந்தையில் தங்கத்தின் விலை ஏற்றத்துடன் முடிந்தது. பங்குச்சந்தை இறுதி நாளான இன்று, தங்கத்தின் விலை குறைந்துள்ளது. இது வெகுஜன மக்களிடையே சந்தோசத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலின் தாக்கம் உலக சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்துவதே இதற்குக் காரணமாக இருக்கம் என வல்லுநர்கள் கூறுகின்றனர். வட்டிக்கு வட்டி மீதான நீதிமன்றத்தின் தீர்ப்பு போன்றவை இந்த விலை குறைவுக்குக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.

எனவே ஆபரணத்தங்கத்தின் மதிப்பு நேற்று ஒரு கிராம் விலை ரூ.4720 க்கு விற்பனையானது. ஆனால் இன்று ஆபரணத்தங்கத்தின் விலையானது கிராமிற்கு ரூ.10 விலை குறைந்துள்ளது, எனவே ஆபரணத்தங்கத்தின் விலை கிராம் ரூபாய் 4710 க்கு விற்பனையாகிறது.

ஆபரணத்தங்கம் (22k)

1 கிராம் -4710
8 கிராம் ( 1 சவரன் ) - 37680

தூய தங்கத்தின் விலையும் இந்த வாரம் ஏற்ற இறக்கத்துடனே உள்ளது. நேற்று ஒரு கிராம் தூய தங்கம் ரூ.5098 க்கு விற்பனையானது. இன்று ஒரு கிராம் தூய தங்கம் ரூ.11 விலை குறைந்து, கிராமானது ரூ‌.5087 க்கு விற்பனையாகிறது.

தூய தங்கம் (24k)

1 கிராம் - 5087
8 கிராம் - 40696

வெள்ளியின் விலை

வெள்ளியின் விலையானது நேற்றைய விலையில் 59 பைசா விலை குறைந்து, கிராம் 66.70 ரூபாய்க்கு விற்பனையாகிறது. எனவே ஒரு கிலோ வெள்ளியின் விலையானது ரூபாய் 66700 க்கு விற்பனையாகிறது.

More Business News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை