தொடர்ந்து ஏறுமுகத்தில் தங்கத்தின் விலை! இந்த வார இறுதியில் ரூ.40000 தாண்டும்! 09-11-2020!

by Loganathan, Nov 9, 2020, 11:48 AM IST

கடந்த அக்டோபர் மாதத்தின் தொடக்கம் முதலே இறங்கத் தொடங்கிய தங்கத்தின் விலை, மாதத்தின் இறுதியில் சற்று உயரத் தொடங்கியது. ஆனால் நவம்பர் மாதத்தின் தொடக்கத்தில் ஏற்றத்துடன் தொடங்கிய தங்கத்தின் விலை பங்குச்சந்தையின் நிலையில்லா தன்மையால் விலையில் மாற்றமில்லாமல் நீடித்தது. ஆனால் வரும் வாரத்தின் தங்கத்தின் விலை சற்று உயர வாய்ப்புள்ளது. இந்த மாதத்தில் விழாக்கள் மற்றும் கொண்டாட்டங்கள் உள்ளதால் தங்கத்தின் விலை உயர வாய்ப்புள்ளதாக வல்லுனர்கள் கூறுகின்றனர்.

மேலும் அமெரிக்க அதிபர் தேர்தலில் நேரடி வாக்குப்பதிவு முடிந்து ஜோபைடன் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது, உலக சந்தையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே சந்தையின் தொடக்கத்தில் பெரிய மாற்றத்தை எதிர்பார்க்கலாம்‌. தீபாவளி நெருங்குவதால் இந்த வாரம் தங்கத்தின் விலையில் பெரிய அளவு மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.4884 க்கு விற்பனையானது. ஆனால் சந்தையின் முதல் நாளான இன்று ஆபரணத்தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.38 உயர்ந்து, கிராமானது ரூ‌ 4922 க்கு விற்பனையாகிறது.

ஆபரணத்தங்கம் (22k)

1 கிராம் - 4922
8 கிராம் ( 1 சவரன் ) - 39376

தூய தங்கத்தின் விலையும் ஏற்ற இறக்கத்திலேயே இருந்தது. நேற்று ஒரு கிராம் தூய தங்கத்தின் விலையானது ரூபாய் 5264 க்கு விற்பனையானது. தூய தங்கத்தின் விலையானது இன்று கிராமிற்கு ரூ.38 விலை உயர்ந்து, கிராமானது 5302 க்கு விற்பனையாகிறது.

தூய தங்கம் (24k)

1 கிராம் - 5302
8 கிராம் - 42416

வெள்ளியின் விலை

தங்கத்தின் விலை உயரும்போது, வெள்ளியின் விலை குறையத் தொடங்கும் ஆனால் பண்டிகை தினங்கள் நெருங்குவதால், வெள்ளியின் விலையானது நேற்றைய விலையில் கிராமிற்கு 1 ரூபாய் உயர்ந்து, கிராம் 71 ரூபாய்க்கு விற்பனையாகிறது. எனவே ஒரு கிலோ வெள்ளியின் விலையானது ரூபாய் 71000 க்கு விற்பனையாகிறது.

You'r reading தொடர்ந்து ஏறுமுகத்தில் தங்கத்தின் விலை! இந்த வார இறுதியில் ரூ.40000 தாண்டும்! 09-11-2020! Originally posted on The Subeditor Tamil

More Business News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை