மக்களிடையே நம்பிக்கையை இழக்கும் பதஞ்சலி தயாரிப்புகள்
பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவன உணவுப் பொருட்கள் தரமற்றதாக இருப்பதாக தொடர்ந்து புகார் எழுந்து வருகிறது. நேபாளத்தின் அண்மையில் பதஞ்சலியின் 6 தயாரிப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
சர்வதேச நிறுவனங்களுக்கு சவால் விடுக்கும் வகையில், பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் துரித உணவுப் பொருள், சூப் ,சோப்புகள்,காஸ்மெடிக்ஸ் உள்ளிட்ட பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. ஆனால், அந்த நிறுவனத்தின் பலத் தயாரிப்புகள் உணவுப் பொருள் தரக் கட்டுப்பாட்டில் தோல்வியடைந்துள்ளன. நேபாளத் உணவுத் தரக்கட்டுப்பாட்டு நிறுவனம், பதஞ்சலியின் 6 தயாரிப்புகள் மக்கள் உட்கொள்வதற்கு உகந்ததாக இல்லை எனக் கூறி தடை விதித்துள்ளது.
ஆம்லா ஜூஸில் கூட உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய வேதிப் பொருட்கள் கலந்திருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பல தயாரிப்புகளுக்கு மக்களிடையே இருந்து சாதகமான ஃபீட்பேக் வரவில்லை என்றும் சொல்லப்படுகிறது கடந்த ஆண்டில் ஹரித்துவார் நீதிமன்றம், பதஞ்சலி நிறுவனம் தனது தயாரிப்புகளைக் கொண்டு தவறான விளம்பரத்தில் ஈடுபடுவதாகக் கூறி 11 லட்ச ருபாய் அபராதமம் விதித்தது.கடந்த இரு வருடங்களுக்கு முன், இந்த நிறுவனத்தின் அட்டா நுடுல்ஸ் பாதுகாப்பு விதிமுறைகளை மீறி தயாரிக்கப்படுவதாக அரசு, நோட்டீஸ் அனுப்பியுள்ள குறிப்பிடத்தக்கது.