ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன், டி.வி வாங்கும் மாணவர், ஆசிரியர்களுக்கு சிறப்புத் தள்ளுபடி

by SAM ASIR, Nov 17, 2020, 21:16 PM IST

மாணவ மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் பயன்பெறும் வகையில் ஒன்பிளஸ் தள்ளுபடியை அறிவித்துள்ளது. ஒன்பிளஸ் ஸ்மார்ட் போன் மற்றும் தொலைக்காட்சி வாங்குவோருக்கும், ஒன்பிளஸ் ஆடியோ சாதனங்கள், உறைகள் மற்றும் பாதுகாப்பு உதிரி பொருள்களுக்கும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. ஒன்பிளஸ் நிறுவனம் சமீபத்தில் ஒன்பிளஸ் 8டி என்ற ஸ்மார்ட்போனை சந்தைக்கு கொண்டு வந்துள்ளது. 8 ஜிபி இயக்கவேகம் மற்றும் 128 ஜிபி சேமிப்பளவு கொண்டு ஒரு மாதிரியும் 12 ஜிபி இயக்கவேகம் மற்றும் 256 ஜிபி சேமிப்பளவு கொண்டு ஒரு மாதிரியும் விற்பனையாகி வருகின்றன. இவற்றின் விலை முறையே ரூ.42,999/- மற்றும் ரூ.45,999/- ஆகும். இவை 120Hz திரை மற்றும் 4500 mAh மின்கலம் கொண்டவை. வேகமாக சார்ஜ் ஆகக்கூடியவை ஆகும்.

மாணவர் அல்லது ஆசிரியர் என்பது ஸ்டூடண்ட் பீன்ஸ் நிறுவனம் மூலம் உறுதி செய்யப்படுகிறது. ஸ்டூடண்ட் பீன்ஸ் மூலம் மாணவர் அல்லது ஆசிரியர் என்பது உறுதி செய்யப்பட்ட பின்னர் ஒரு கூப்பன் வழங்கப்படுகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம். ஒருமுறை உறுதி செய்யப்பட்டவர், அந்த ஆண்டில் ஒருமுறை தள்ளுபடி பெறலாம். இது மாணவர் மற்றும் ஆசிரியர்களுக்கு மட்டுமே உரியது. இந்த சலுகையை மற்ற யாருக்கும் மாற்ற இயலாது. ஓராண்டு முடிந்தால் கூப்பனின் செல்லுபடி காலம் முடிந்து விடும். செல்லுபடி காலம் முடிந்துவிட்டால் மீண்டும் ஸ்டூடண்ட் பீன்ஸ் மூலம் மாணவர் என்பது உறுதி செய்யப்பட வேண்டும்.

மாணவர் மற்றும் ஆசிரியர் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்கள் மற்றும் டி.வி விலையில் ரூ.1000/- தள்ளுபடி பெறலாம். ஏனைய ஒன்பிளஸ் உதிரி பாகங்களின் விலையில் 5 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

More Business News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை