குவாட் காமிரா, 10W சார்ஜிங் சப்போர்ட்: நோக்கியா 5.3 ஸ்மார்ட்போன் விலை குறைப்பு

by SAM ASIR, Jan 4, 2021, 20:48 PM IST

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட பட்ஜெட் ஸ்மார்ட்போன்களுள் ஒன்றான நோக்கியா 5.3 தற்போது விலை குறைக்கப்பட்டு விற்பனையாகி வருகிறது. குறைக்கப்பட்ட புதிய விலையில் நோக்கியாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இந்த ஸ்மார்ட்போனை வாங்கலாம். தற்போது சயான், சாண்ட் மற்றும் கார்கோல் வண்ணங்களில் நோக்கியா 5.3 கிடைக்கிறது.

நோக்கியா 5.3 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்:
தொடுதிரை: 6.55 அங்குலம் எச்டி+; 720X1600 பிக்ஸல் தரம்; 20:9 விகிதாச்சாரம்
இயக்கவேகம்: 4 ஜிபி மற்றும் 6 ஜிபி
சேமிப்பளவு: 64 ஜிபி (மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் 512 ஜிபி ஆக உயர்த்தலாம்)
முன்புற காமிரா: 8 எம்பி ஆற்றல்
பின்புற காமிரா: 13 எம்பி + 5 எம்பி + 2 எம்பி + 2 எம்பி (குவாட் காமிரா)
பிராசஸர் : ஆக்டா-கோர் குவல்காம் ஸ்நாப்டிராகன் 665; ஆட்ரெனோ 610 ஜிபியூ
இயங்குதளம் : ஆண்ட்ராய்டு 10
மின்கலம்: 4,000 mAh
சார்ஜிங் சப்போர்ட்: 10W
4 ஜிபி இயக்கவேகம் கொண்ட நோக்கியா 5.3 ஸ்மார்ட்போன் ரூ.1,000/- குறைக்கப்பட்டு ரூ.12,999/- விலையில் விற்பனையாகிறது. 6 ஜிபி இயக்கவேகம் கொண்ட நோக்கியா 5.3 ஸ்மார்ட்போன் ரூ.1,000/- விலை குறைக்கப்பட்டு தற்போது ரூ.14,499/- விலையில் கிடைக்கிறது.

More Business News


அண்மைய செய்திகள்