சினிமாவும் பார்க்கலாம்: இவோஃபாக்ஸ் கேம்பாக்ஸ் அறிமுக சலுகைவிலையில் கிடைக்கிறது

by SAM ASIR, Jan 7, 2021, 21:00 PM IST

ஆம்கேட் (Amkette) 4 கே இவோஃபாக்ஸ் கேம்பாக்ஸ் ஜனவரி 8ம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. முதல் வாரம் மட்டும் அறிமுக சலுகை விலையில் விற்பனையாகும். PacMan உள்ளிட்ட பிரபல தலைப்புகளிலான 100 கேம்கள் இதில் நிறுவப்பட்டிருக்கும். பயனர்கள் கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் மூன்றாம் நபர் செயலிகளிலிருந்து கேம்களை தரவிறக்கம் செய்து கொள்ள முடியும். இது தனி நபர் (single-player) மற்றும் பல நபர் (multiplayer) விளையாடக்கூடிய வசதி கொண்டது. பயனர்கள் கேம் கண்ட்ரோலர் மூலம் பலநபர் விளையாட்டுகளை விளையாட முடியும். பயனர்கள், பிரபல ஓடிடி தளம் மூலம் இதில் திரைப்படங்களையும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் பார்க்கலாம்.

எச்.265 வடிவம் உள்ளிட்ட முக்கியமான ஒலி தரங்களை இதில் பயன்படுத்தலாம். கூடுதலாக கீபோர்டு இணைத்து பிரௌசராக பயன்படுத்த முடியும். வெம்காம் (webcam) இணைத்து Zoom, Google Meet போன்ற செயலிகள் மூலம் வீடியோ அழைப்புகளை செய்ய முடியும். குவாட் கோர் ஏ55 ஏஆர்எம் பிராசஸர், மாலி ஜி31 கிராபிக்ஸ் பிராசஸர் இவற்றுடன் 4 ஜிபி இயக்கவேகம் கொண்டதாகவும் 32 ஜிபி சேமிப்பளவு கொண்டதாகவும் ஆம்கேட் 4 கே இவோஃபாக்ஸ் கேம்பாக்ஸ் இருக்கும். ஆண்ட்ராய்டு டிவி9 இயங்குதளம் கொண்ட இந்த கேம்பாக்ஸின் மின்கலம் 8 மணி நேரத்திற்கான மின்னாற்றலை கொண்டிருக்கும். ஆம்கேட் (Amkette) 4 கே இவோஃபாக்ஸ் கேம்பாக்ஸின் விலை ரூ.9,999/- ஆகும். ஆனால் ஜனவரி 8ம் தேதி முதல் ஒரு வார காலத்திற்கு அறிமுக சலுகை விலையாக ரூ.8,999/-க்கு இதை வாங்கலாம்.

More Business News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை