ஸோமி (Xiaomi) நிறுவனம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்தியாவில் லேப்டாப்களை அறிமுகம் செய்தது. மி நோட்புக் 14 வகை மடிக்கணினிகளை அறிமுகம் செய்த ஸோமி தற்போது மி நோட்புக் 14 (ஐசி) மடிக்கணினியை விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது.
மி நோட்புக் 14 (ஐசி) லேப்டாப்பின் சிறப்பம்சங்கள்:
தொடுதிரை: 14 அங்குலம் எஃப்எச்டி; 1920X1080 பிக்ஸல் தரம்; ஆன்ட்டிகிளேர்
திரை விகிதம்: 81.2 சதவீதம் ஸ்கிரீன் டூ பாடி
ஆஸ்பெக்ட் ரேஷியோ: 16:9
இயக்கவேகம்: 8 ஜிபி
சேமிப்பளவு: 512 ஜிபி
வெப்காம்: 720பி எச்டி (பில்ட்இன்)
இயங்குதளம்: விண்டோஸ் 10 ஹோம் எடிஷன்
பார்வை கோணம்: 178 டிகிரி வைட் வியூவிங்
மின்கலம்: 46Whr; 10 மணி நேரம் பேட்டரி லைஃப்
கிராபிக்ஸ்: Nvidia GeForce MX250
பிராசஸர்: 1.6 GHz இன்டெல் கோர் ஐ5-10210யூ குவாட்-கோர்
மி நோட்புக் 14 (ஐசி) லேப்டாப் சில்வர் நிறத்தில் மட்டும் மி.காம் (Mi.com) தளத்தில் கிடைக்கிறது. அதன் விலை ரூ.43,999/- ஆகும். மி ஹோம்ஸ், அமேசான்.இன், ஃபிளிப்கார்ட் தளங்களிலும் அங்காடிகளிலும் விற்பனைக்கு வர உள்ளது. ஆக்ஸிஸ் வங்கி கார்டு மூலம் வாங்குவோருக்கு 10 சதவீதம் உடனடி தள்ளுபடி உண்டு.