தொடர் இறக்கத்தில் தங்கத்தின் விலை! 15-02-2021

by Loganathan, Feb 15, 2021, 11:28 AM IST

கொரோனா, பொருளாதார சீர்கேடு, சுகாதாரத்தின் மீதான நம்பிக்கையின்மை, கொரோனா தடுப்பூசி என பல இன்னல்களைச் சந்தித்தாலும் தங்கத்தின் மீதான மோகம் மட்டும் குறைந்தபாடில்லை. கடந்த ஆண்டில் தங்கத்தின் மீதான விலை ஏற்றம், இறக்கம் என ஆட்டம் கண்டாலும், இந்த 2021 விலை ஏற்றத்தின் மீது பெரிய மாறுதல் நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

இந்நிலையில் ஜனவரி மாதமும் தங்கத்தின் மீதான விலை ஏற்ற இயக்கத்திலேயே இருந்தது வந்தது. இதற்குக் காரணமாக கொரோனா பெருந்தொற்றும், அதனால் ஏற்பட்ட விளைவுகளின் தாக்கமும் ஏற்படுத்திய பாதிப்புகள் தான். இந்த பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள உலக நாடுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டும் வருவதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மத்திய அரசானது 2021-2022 ம் ஆண்டிற்கான ஆண்டு பட்ஜெட் நேற்று வெளியிடப்பட்டது. அதில் தங்கத்தின் மீதான வரி குறைக்கப்படுவதான அறிவிப்பு வெளியிடப்பட்டதை அடுத்து, தங்கத்தின் மீதான விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. நேற்று ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.4468 க்கு விற்பனையானது. இன்று ஆபரணத்தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.4 உயர்ந்து, கிராமானது ரூ.4464 க்கு விற்பனையாகிறது.

ஆபரணத்தங்கம் (22k)

1கிராம்- 4464
8 கிராம் (1 சவரன்) - 35712

துய தங்கத்தின் விலையும் ஏற்ற இறக்கத்திலேயே இருந்தது. நேற்று ஒரு கிராம் தூய தங்கத்தின் விலையானது ரூ.4852 க்கு விற்பனையானது. இன்று தூய தங்கத்தின் விலை கிராமிற்க்கு ரூ.4 உயர்ந்து, கிராமானது ரூ.4848 க்கு விற்பனையாகிறது.

தூய தங்கம்(24k)

1 கிராம் - 4848
8 கிராம் - 38784

வெள்ளியின் விலை

தங்கத்தின் விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்தாலும், வெள்ளி ஓரளவிற்குச் சந்தையில் தாக்குப்பிடிக்கும். இன்று வெள்ளியின் விலையானது கிராமிற்கு 60 பைசா உயர்ந்து , இன்று கிராமானது ரூ.74.50 க்கு விற்பனையாகிறது. எனவே ஒரு கிலோ வெள்ளியின் விலையானது ரூ.74500 க்கு விற்பனையாகிறது.

You'r reading தொடர் இறக்கத்தில் தங்கத்தின் விலை! 15-02-2021 Originally posted on The Subeditor Tamil

More Business News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை