புதிய உச்சத்தை தொட்ட பெட்ரோல், டீசல் விலை

May 27, 2018, 08:50 AM IST

சென்னையில், பெட்ரோல் மற்றும் டீசலின் விலை புதிய உச்சத்தை தொட்டு வாகன ஓட்டிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாள்தோறும் நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்த பிறகு, அதன் விலையில் ஏற்றம் இறக்கம் காணப்படுகிறது. சமீபத்தில் நடைபெற்ற கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு, பெட்ரோல் மற்றும் டீசல் விலை வரலாறு காணாத புதிய உச்சங்களை தொட்டு வருகிறது. இந்த விலை உயர்வுக்கு எரிப்பொருட்களின் விலை உயர்வு காரணம் என கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று பெட்ரோலின் விலை லிட்டருக்கு 16 பைசா உயர்ந்து, ரூ.81.11 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 17 பைசா உயர்ந்து ரூ.72.91 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அன்றாட வேலைக்கு பைக்கில் செல்லும் வாகன ஓட்டிகள் பெட்ரோல் விலையின் உயர்வால் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More Business News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை