வட்டி விகிதாச்சாரங்களை அதிகரித்த ஸ்டேட் பாரத வங்கி!

by Rahini A, May 31, 2018, 14:29 PM IST

பாரத ஸ்டேட் வங்கியின் தொடர் மாறுதல்களில் தற்போது வைப்பு நிதிக்கான வட்டித்தொகையும் மாறுதலுக்கு உள்ளாகி உள்ளது.

சில வைப்பு நிதிகளுக்கு வட்டி விகிதத்தை அதிகரித்துள்ள எஸ்.பி.ஐ, மீதமுள்ளதற்கு எந்த மாற்றமும் செய்யவில்லை. இந்த வைப்பு நிதி வட்டி விகித மாற்றம், மே 28 ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக எஸ்.பி.ஐ தெரிவித்து உள்ளது.

ஒரு ஆண்டுக்கு மேலும் இரண்டு ஆண்டுக்கு உள்ளும் மெச்சூரிட்டி காலம் கொண்ட வைப்பு நிதிகளுக்கு 6.4 சதவிகிதமே வட்டி இருந்தது. தற்போது, அது 6.65 சதவிகிதமாக மாற்றப்பட்டு உள்ளது.

இதுவே, மூத்த குடிமக்களுக்கு 6.9 சதவிகிதத்தில் இருந்து 7.15 சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. அதேபோல, இரண்டு வருடத்துக்கு மேலாகவும் மூன்று ஆண்டுக்கு உள்ளாகவும் முதிர்வு காலம் இருக்கும் வைப்பு நிதிக்கு 6.6 சதவிகிதமாக இருந்த வட்டி விகிதத்தை 6.65 சதவிகிதத்துக்கு உயர்த்தியுள்ளது எஸ்.பி.ஐ. மூத்த குடிமக்களுக்கு இது 7.1 சதவிகிதத்தில் இருந்து 7.15 சதவிகிதமாக மாற்றப்பட்டு உள்ளது.

ஆனால், மற்ற முதிர்வு காலம் கொண்ட வைப்பு நிதி கணக்குகளுக்கு வட்டி விகிதத்தில் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை பாரத ஸ்டேட் வங்கி. எஸ்.பி.ஐ வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் செய்துள்ளதால், மற்ற போட்டி வங்கிகளும் வட்டி விகித மாற்றத்தை மேற்கொள்ளும் என்று யூகிக்கப்படுகிறது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More Business News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை