வீழ்ச்சிப் பாதையில் வங்கிகள்: இழப்பை ஈடுசெய்ய தவிக்கும் அரசு!

by Rahini A, Jun 3, 2018, 19:28 PM IST

மாநில நிர்வாகத்துக்குக் கீழ் இருக்கும் வங்கிகளில் ஏற்பட்ட நஷ்டம் ஒட்டுமொத்த மத்திய மூலதனத்துக்கும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் நிதியறிக்கை நிறுவனமான ஃபிட்ச் எச்சரிக்கை மணி அடித்துள்ளது.

இதுவரையில் இந்த 2018-ம் நிதியாண்டு தான் மோசமான நிதியாண்டாக அமைந்துள்ளது என்றும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இந்த மிகப்பெரும் இழப்பு ஏற்பட்டதற்கான காரணம் குறித்தும் விளக்கப்பட்டுள்ளது. அதில், செயலற்ற சொத்துகள் மீதான அங்கீகராங்களை மறுபரிசீலனை செய்ததால் தான் வாராக்கடன் பிரச்னை அதிகரித்து நஷ்டம் ஏற்பட்டுள்ளது என பிப்ரவரி 12-ம் தேதி நடந்த மறு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

நடைமுறையில் இதுபோன்ற பரிசீலனைத் திட்டங்கள் என்பது வங்கித்துறைக்கு ஊக்கமளிப்பதாகவே இருக்க வேண்டும். ஆனால், மாநில சுய ஆட்சியில் இருக்கும் வங்கி நிர்வாகங்கள் இழப்பையே சந்தித்துள்ளன.

இந்த மறு ஆய்வு என்பது கடந்த நிதியாண்டில் மாநில வங்கிகளால் தரப்பட்ட கடனில் இருந்து 2.5 சதவிகிதம் தான் இழப்பீடைச் சந்தித்தது. ஆனால், இந்த 2018-ம் நிதியாண்டில் நஷ்டம் அதிகரித்து அதன் விகிதாச்சாரம் 4.3 சதவிகிதமாக உள்ளது. இதே நிலையில் செயலற்ற சொத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து 9.3 சதவிகிதத்தில் இருந்து 12.1 சதவிகிதம் வரையில் வளரும் நிலை உள்ளதாகவே கூறப்படுகிறது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

 

More Business News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை