எகிறும் ஹோண்டா பைக் விற்பனை! இந்தியா அளவில் முதலிடம்!

by Rahini A, Jun 3, 2018, 21:06 PM IST

2018-ம் ஆண்டு தொடக்கத்தில் இருந்தே ஹோண்டா மோட்டார் சைக்கிள் நிறுவனம் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் ஆகிய இரண்டும் விற்பனையில் மிகவும் மேகமெடுத்து வந்தன.

அந்த வகையில் இந்த மே மாத விற்பனையும் அதிரடி விற்பனையாக இருந்துள்ளது. இந்த ஜப்பானிய நிறுவனம் 2018 மே மாதம் மட்டும் தன்னுடைய வளர்ச்சி 3 சதவிகிதம் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதாவது கடந்த ஆண்டு மே மாதம் 5,37,035 ஹோண்டா பைக்குகள் விற்பனை ஆனதாம். ஆனால் இந்த ஆண்டு மே மாதம் இதே ஹோண்டா பைக்குகளின் விற்பனை 5,51,601 ஆக உள்ளதாம்.

இதுவே கடந்த ஏப்ரல் மாதம் ஹோண்டா பைக்குகள் விற்பனையின் வளர்ச்சி விகிதம் 2 சதவிகிதம் ஆக இருந்துள்ளது. அதாவது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 3,47,703 ஹோண்டா பைக்குகள் விற்பனை ஆனதாம். ஆனால் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இதே ஹோண்டா பைக்குகளின் விற்பனை 3,54,211 ஆக உள்ளதாம்.

மொத்தமாக மோட்டார் சைக்கிள் விற்பனை கடந்த ஆண்டை விட 10 சதவிகிதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு விற்பனை எண்ணிக்கை 1,89,332. ஆனால், இந்த ஆண்டு 2,08,625 என்பது விற்பனை எண்ணிக்கை.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More Business News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை