வீழும் இந்தியப் பொருளாதாரம்! கடனில் வங்கிகள்!

by Rahini A, Jun 8, 2018, 21:40 PM IST

இந்தியா தன் வங்கித்துறையை மீட்டு எடுத்து வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல வேண்டுமானால் வாராக்கடன் பிரச்னையை சமாளிக்க வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் அறிவுறுத்தி உள்ளது.

இதுகுறித்து சர்வதேச நாணய நிதியத்தின் செய்தித் தொடர்பாளர் ஜெர்ரி ரைஸ் கூறுகையில், ”வங்கித்துறையின் இருப்பு நிலையை மேம்படுத்துவதும் பொதுத்துறை வங்கிகளின் செயல்பாடுகளை மெருகேற்றுவது மட்டுமே தற்போதைய சூழலில் இந்தியாவின் முதலீடு மற்றும் உட்கட்ட வளர்ச்சியை மீட்டு எடுப்பதற்கான ஒரே வழிமுறை ஆகும்” எனக் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், ”தற்போதைய சூழலில் இந்த வாராக்கடன்களை சரிகட்டுவதில் இந்திய வங்கித்துறை ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. வாராக்கடன்களை தள்ளுபடி செய்வது அடையாளம் கண்டு மாற்று ஏற்பாடுகளைச் செய்வது என செயல்படத் தொடங்கினால் மட்டுமே பொருளாதார வளர்ச்சி குறித்து இந்தியா தீர்மானிக்க முடியும்.

சொத்து மதிப்பின் தகுதி அடிப்படையிலான மேற்பார்வையை தற்போது மேற்கொண்டு வருவது நல்ல முன்னேற்றம் ஆகும். நெருக்கடி காலத்தில் துவக்க எல்லையில் இந்தியப் பொருளாதாரம் நிலைத்துள்ளது. இதிலிருந்து மீள்வது எளிதுதான்.

சரியான அரசு விதிமுறைகள் புனரமைக்கப்பட்டு பொருளாதார ரீதியிலான மேம்பாடுகளை இந்தியப் பொதுத்துறை வங்கிகள் அடையும் வாய்ப்பை உருவாக்கித் தர வேண்டும். அவசர கால திட்டங்கள் வாரக்கடன் பிரச்னையை சமாளிக்கும் வகையில் அமைய வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

 

You'r reading வீழும் இந்தியப் பொருளாதாரம்! கடனில் வங்கிகள்! Originally posted on The Subeditor Tamil

More Business News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை