வரி விலக்குக்காக மியூச்சுவல் பண்டு திட்டத்தின் மூலம் சேமிப்பு செய்வதற்கான ஒரு வழி தான் ஈ.எல்.எஸ்.எஸ் என்ற ஈக்விட்டி சேமிப்பு திட்டம். ஆனால், எஸ்.ஐ.பி திட்டம் என்பது முற்றிலும் வேறானது. இது நேரடியாக மியூச்சுவல் பண்டு திட்டம் மூலமாக சேமிக்கக் கூடிய திட்டம் ஆகும்.
முதலீடு திட்டம் ஒன்று தான் மியூச்சுவல் பண்டு மூலம் முதலீடு செய்வதற்கான ஒரே வழி முறை ஆகும். இந்த மியூச்சுவல் பண்டு மூலம் சேமிப்பது எப்படி என்பது குறித்தும் சரியான பண்டுகளைத் தேர்வு செய்வது எப்படி என்பது குறித்தும் கீழே பார்க்கலாம்!
முதலீடுகளை துவக்கும் முன்னர் முதலில் உங்கள் நிதி ஆலோசகரிடம் ஆலோசனை பெறுவது அவசியம். முதலீடு செய்வதற்கு முன்னர் உங்கள் நிதி சார்ந்த குறிக்கோளை தீர்மானிக்க வேண்டும். எதற்காக முதலீடு செய்கிறீர்கள் என்பதற்கான காரணத்தை தீர்மானித்துக் கொள்ளவும்.
முதலீடுகளின் அடிப்படையில் அதிரடியான, மிதமான, மற்றும் மிகவும் மிதமான என மூன்று வகைகளில் பண முதலீடுகள் செய்ய முடியும். நமது நிதி வருவாய் பொறுத்தும் நிதி தேவை பொறுத்தும் முதலீடுகளை தேர்வு செய்வது அவசியம் ஆகிறது. எவ்வளவு தூரம் ரிஸ்க் எடுக்க முடியும் என்பதை முதலீட்டாளர்கள் முன்னரே தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.
குறிப்பாக, அதிரடியான முதலீடுகளில் வருமானம் அதிகம் கிடைக்கும் என்றாலும் அதில் ரிஸ்க் அதிகம். இதனால் சந்தையின் போக்கை அறிந்து நமது நிதி சார்ந்த புரிதலும் முதலீட்டாளர்களுக்கு அவசியம்.