விற்ற பங்குகளைத் திரும்ப வாங்குவதாக டிசிஎஸ் நிர்வாகம் எடுத்த முடிவால் இன்று ஒரு நாளில் மட்டும் டிசிஎஸ் நிறுவனத்தின் பங்குகளின் வளர்ச்சி 1 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
இதற்கான அதிகாரப்பூர்வ ஒப்பந்தத்தில் டிசிஎஸ் நிறுவனம் இன்று ஒப்புதல் அளித்து கையெழுத்திடுகிறது. நேற்று வியாழக்கிழமை மாலையில் பங்குச்சந்தையின் வணிக நேர முடிவில் சென்செக்ஸ் 1,791.25 புள்ளிகளாக டிசிஎஸ் பங்குகளின் வர்த்தகம் நிறைவடைந்தது.
அதே பங்குகள் இன்று காலை பங்குச்சந்தையின் வர்த்தகம் தொடங்கும் வேளையில் 1,810 புள்ளிகளாக உயர்ந்து காணப்பட்டது. இன்று மதிய வேளையில் டிசிஎஸ் பங்குகள் 043 சதவிகிதம் உயர்ந்து 1,800 ரூபாய்க்கு வர்த்தகம் ஆனது. இதுவரையில் கடந்த 52 வாரங்களில் இல்லாத வளர்ச்சியாக நிர்வாகக் குழுவின் முக்கியச் சந்திப்புக்கு முன்னரே டிசிஎஸ் பங்குவர்த்தகம் உச்சத்தில் ஏறத் தொடங்கியது.
கடந்த ஜூன் 12-ம் தேதி டிசிஎஸ் நிறுவனம் பங்குச்சந்தை கூட்டத்தில் பங்குகளை ஜூன் 15-ம் தேதி திரும்ப வாங்குவதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது ஆகும்.
டாடா நிறுவனத்துக்கு சர்வதேச அளவில் 46 நாடுகளில் 3,94,000 கன்சல்டன்ட்ஸ்கள் உள்ளனர். கடந்த மார்ச் 31, 2018 அடிப்படையில் டாடா கன்சல்டன்சி நிறுவனத்தின் வருமானம் மட்டும் 19.09 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.