சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் ஸ்மார்ட் போன், இன்டர்நெட், யூடியூப், சமூக வலைத்தளங்கள் என இவைகள் இல்லாமல் வாழ்க்கையே இல்லை என்றாகிவிட்டது. தங்களின் அன்றாட வாழ்வில் ஒரு அங்கமாக இவைகள் அமைந்திருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது. பிறந்த குழந்தைகள் கூட ஸ்மார்ட் போன்களை கண்டால் குஷியாகி விடுகின்றனர். அப்படிபட்ட ஒரு குழந்தை தான் ரியான். அமெரிக்காவை சேர்ந்த ரியான் தனது 4வது வயதிலேயே யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி, கடந்த ஓர் ஆண்டில் மட்டும் 11 மில்லியன் டாலரை சம்பாதித்துள்ளான். தற்போது ரியானுக்கு 6 வயதாகிறது. இந்த சிறு வயதில் இவ்வளவு பெரிய தொகையை சம்பாதிக்க முடிந்தால் ரியான் கூட அம்பானி தானே.
ஆம். ரியான் தனது தாயின் உதவியுடன் 4 வயதிலேயே ‘டாய்ஸ் ரிவ்யூவ்’ என்ற சேனலை தொடங்கினான். ‘டாய்ஸ் ரிவ்யூவ்’ என்ற யூடியூப் சேனலில் அப்படி என்ன சிறப்பு என்றால்.. வேறு ஒன்றுமில்லை ரியானின் மழலை பேச்சில் அவன் பொம்பைகள் குறித்து பேசும் அழகும், சுட்டித் தனமும் தான் காரணம். ரசிகர்களை சுண்டி இழுக்கும் அவனது பேச்சால், டாய்ஸ் ரிவ்யூவ் சேனலுக்கு மட்டும் இதுவரையில் 1 கோடி ரசிகர்களாம்.
அமெரிக்காவில் மிகவும் பிரபலமடைந்த இந்த யூடியூப் சேனல் ஆரம்பத்தில் அவ்வளது ரீச் இல்லை என்றாலும், நாட்கள் செல்ல செல்ல ரியானும் சரி ரியானின் டாய்ஸ் ரிவ்யூவ் சேனலும் சரி பிரபலமாகிவிட்டது. ரியானிற்கு பக்கபலமாக இருந்த அவரது தாய், தனது ஆசிரியர் பணியை விட்டுவிட்டு ரியானின் யூடியூப் சேனலில் முழு கவனம் செலுத்தி வருகிறார். கமர்ஷியலான விஷயங்கள் எதுவும் இந்த சேனலில் இல்லை என்றாலும் ரியானுக்காகவே பாலோவர்ஸ் இருக்கிறார்கள்.
இந்த ஆண்டில் யூடியூப் மூலம் அதிக வருமானம் பெற்றவர்களின் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டது. இதில் ரியான் எட்டாவது இடத்தை பிடித்துள்ளான். இது ஆச்சர்யமான விஷயமல்லவா.
ரியான் போன்று பலர் 2017ம் ஆண்டில் மட்டும் மொத்தம் 127 மில்லியன் டாலர் வருமானம் பெற்றுள்ளனர். இது தற்போது மிகவும் டிரெண்டிங் ஆகி உள்ளது. இன்டர்நெட்டின் வளர்ச்சி பல மடங்கு அதிகமாக உள்ளதாலும், எளிதில் பயன்படுத்தக்கூடிய வசதிகள் இருப்பதாலும் நாளுக்கு நாள் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிவிட்டது.
இப்படி பயனாளர்களால் யூடியூப், இன்டெர்நெட் வளர்ச்சி ஒரு பக்கம் இருந்தாலும், மற்றொரு பக்கம் யூடியூப் மூலம் மில்லியன் கணக்கில் பணம் சம்பாதித்து ஆச்சரியப்படுத்திக் கொண்டிருக்கின்றனர் சிலர். அந்த பட்டியலில் முதலிடம் பிடித்த டேனியல் மிடில்டன், கடந்த ஜூன் மாதம் முதல் இந்த ஆண்டு ஜூன் மாதம் வரையில் மட்டும் 165 மில்லியன் டாலர்கள் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 106.5 கோடி சம்பாதித்துள்ளார். ஆச்சரியமாக உள்ளது அல்லவா?
டேனியல் தனது யூடியூப் சேனலுக்கு இருக்கும் சப்ஸ்கிரைபர்களின் எண்ணிக்கை சுமார் 17 கோடி. கேமிங் வீடியோக்கள் தான் இவரின் சிறப்பு. இவருக்கு அடுத்த இடத்தில் இருக்கும் இவான் பாங் சம்பாதித்த தொகை 15.5 மில்லியன் டாலர்கள். இவரும் கேமர்தான். இதுபோன்று யூடியூப் பிரபலங்கள் சம்பாதித்த தொகை மட்டும் என மொத்தம் 127 மில்லியன் டாலர்கள் ஆகும்.