மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் புதிய உச்சத்தை இன்று காலையிலேயே தொட்டுள்ளது.
அதைப் போலவே தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீடும் வரலாறு காணாத உயரத்தை அடைந்துள்ளது. மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 37,000 புள்ளிகளை கடந்து 37,014.65 என்ற நிலையில் உள்ளது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீடு 11,172.20 என்ற உச்ச நிலையை அடைந்திருக்கிறது.
இன்று பங்குச் சந்தை வர்த்தகம் ஆரம்பித்த முதல் சில நிமிடங்களிலேயே, சென்செக்ஸ் 118.43 புள்ளிகள் அல்லது 0.32 சதவிகிதம் அதிகரித்தன. நிஃப்டி, 11,132.95 என்ற நிலையில் தொடங்கியது. அதுவும் பங்குச் சந்தை வர்க்கம் ஆரம்பித்த சில நிமிடங்களில் 11,72.20 என்ற வரலாறு காணாத உச்சத்தை எட்டியது.
நிஃப்டியில் இருக்கும் 50 ஸ்டாக்குகளில் 32 ஸ்டாக்குகளின் புள்ளிகள் இன்று காலையிலேயே அதிகரித்துள்ளன. பாரத ஸ்டேட் வங்கி, ஐடிசி, லார்சன் அண்டு டூப்ரோ, பாரதி ஏர்டெல், ஹீரோ மோட்டோ கார்ப் ஆகிய நிறுவனங்கள் சென்செக்ஸில் அதிக புள்ளிகள் பெற்றன.