ஆன்லைன் மூலம் காய்கறி விற்பனை... அசத்தும் ஃபிரஷ் இ ஷாப்!

by Isaivaani, Dec 23, 2017, 11:08 AM IST
திருநெல்வேலியை மையமாகக் கொண்டு ஆன்லைன் மூலம் காய்கறிகள், பழங்கள், சமையல் பொருட்கள் உள்ளிட்டவற்றை  விற்பனை செய்து வாடிக்கையாளர்கனின் மனதை கவர்ந்துள்ளது ஃபிரஷ் இ ஷாப்(Fresh e shop).
ஃபிரஷ் இ ஷாப் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள், ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் வாடிக்கையாளர்களின் வீடுதேடிச் சென்று ஃபிரஷான காய்கறிகள், பழங்கள், சமையல் பொருட்கள் உள்ளிட்டவற்றை விநியோகம் செய்து வருகின்றனர். இவர்களின் சேவையும் பொருள்களின் தரமும் வாடிக்கையாளர்களை தொடர்து பொருட்களை வாங்கும் ஆர்வத்தை ஏற்படுத்தி வருகின்றன.
இதை அறிந்து, நாம் அந்நிறுவனத்தைச் சேர்ந்த நாதனை தொடர்பு கொண்டு பேசினோம், “வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தேவையான காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை எங்கள் இணையதளம் மூலம் ஆர்டர் செய்கிறார்கள். எங்களை நம்பி பொருட்களை வாங்க மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். அவர்களை ‘ஒரு ராஜாவைப்போல நடத்துவது எங்களின் கடமையாகக் கருதுகிறோம். 
வாடிக்கையாளர்கள் கேட்கும் எதையும் நாங்கள் இல்லை என்று சொல்வதில்லை. எங்களிடம் 2,500க்கும் மேற்பட்ட பொருட்கள் இருக்கின்றன. பிற கடைகளில் கிடைப்பதைவிட விலை குறைவாகவும், தரமானதாகவும் கொடுத்து வருகிறோம்.  அதுமட்டுமின்றி, அவர்களுக்கு உரிய நேரத்தில் கொண்டுசேர்கிறோம். இதனால், எங்களிடம் ஒருமுறை பொருட்களை வாங்கினால் தொடர்ந்து எங்களிடமே வாங்குவதையே விரும்புகின்றனர். அத்துடன் எங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்களைப்போல உணர்கின்றனர். வாடிக்கையாளர்களை திருப்திபடுத்துவதே எங்கள் முதன்மையான நோக்கமாகக் கொண்டுள்ளோம். 
250 ரூபாய்க்கு மேல் ஆர்டர் செய்பவர்களுக்கு நாங்கள் சர்வீஸ் சார்ஜ் எதுவும் வாங்குவதில்லை. விழா காலங்களில் நாங்கள் சிறப்புத் தள்ளுபடி, சிறப்புத் திட்டங்களை அமல்படுத்துகிறோம். அந்த வகையில், தற்போது கிறிஸ்மஸ், மற்றும் புத்தாண்டு சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளோம்.” என்றார் அக்கறையுடன்.
இந்த நிறுவனத்தைப் பற்றி அதன் வாடிக்கையாளர் ஒருவரிடம் பேசுகையில், “எங்களுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களும் தரமான முறையில், உரிய நேரத்தில் வீடுதேடி வருவதால் மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கின்றது. கடைக்குச் சென்று காய்கறிகள் உள்ளிட்டவற்றை தரம்பார்த்து வாங்குவது சிரமமாக உள்ளது. ஆனால், இவர்களிடம் என்ன பொருள் வேண்டும் என்று சொல்லிவிட்டால் போதும். தரமான பொருள் வீடுதேடி வந்துவிடும். எங்களுக்கு அலைச்சலும் இல்லை. தரமான பொருட்களாவே எப்போதும் இருப்பதால் கண்ணை மூடிக்கொண்டு ஆர்டர் செய்துவிட்டு நிம்மதியாக இருக்க முடிகின்றது”  என்றார்.
மேலும், “இந்த நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் அவ்வப்போது சமையல் போட்டிகளையும் நடத்தி வருகின்றனர், அதில் என்னைப்போன்ற  இல்லத்தரசிகள் கலந்துகொண்டு எங்கள் திறமைகளை வெளிப்படுத்துகிறோம்.” என்றார் உற்சாகம் குறையாமல்.
ஃபிரஷ் இ ஷாப் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் வெறும் லாப நோக்கில் மட்டும் இதைச் செய்யாமல் சேவை மனப்பான்மையுடனும் செயலாற்றி வருவதாக அப்பகுதி மக்கள் சிலர் கருத்து தெரிவித்தனர்.

More Business News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை