அனிதாவின் வில்லத்தனம்.. டாஸ்க்கின் தரவரிசை பட்டியல் .. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது??

ஜித்து ஜில்லாடி பாடலோடு ஆரம்பித்தது நாள். பாலா பர்த்டேக்கு போட்ட பாட்டுனு பாலா ரசிகர்கள் சொல்றாங்க. நான் இல்லை மக்களே.

என்னிக்குமில்லாத திருநாளா மார்னிங் டாஸ்க் நடந்ததை காமிச்சாங்க. அப்பவே டவுட். இது எப்படியும் மொக்கையா தானே இருக்கும் , இதை எதுக்கு போடறாங்கனு யோசிச்சுட்டே பார்த்துட்டு இருந்தேன். அப்புறம் தான் தெரிஞ்சுது சனம் ஒரு சம்பவம் பண்ணிருக்காங்கனு. அடுத்து நடக்கப் போற பஞ்சாயத்துக்கு பிள்ளையார் சுழி போட்ருக்காங்க.

குமாருங்கற பேரை நிறைய மாடுலேஷன்ல சொல்லனுமாம். ஒரு குரூப்பா இருக்கும்போது, அந்த குரூப்ல இருந்து ஒருத்தன் என்ன செஞ்சாலும், சொன்னாலும், மிச்ச பேர் எல்லாரும் சேர்ந்து கைதட்டி உற்சாகப்படுத்துவாங்க. ரியோ, கேப்பி, ரமேஷ், நிஷா, அர்ச்சனா எல்லாரும் முன்வரிசைல உக்காந்து சோம் சொல்றதுக்கு எல்லாம் சிரிச்சு கைதட்டிட்டு இருந்தாங்க. "அன்பாலே அழகான வீடு" பாட்டு மட்டும் தான் பேக்கிரவுண்ட்ல இல்லை. அட சோம் சொன்னது நல்லா இருந்தாலும் பரவால்ல, அதுவே படு மொக்கையா இருக்கு. அதுக்கும் கைதட்டி சிரிக்கறாங்க.

டாஸ்க் போய்ட்டு இருந்த போது சனமை கூப்பிடறாரு சோம். ஏற்கனவே கால் செண்டர் டாஸ்க்ல சனம் flirt பண்றாங்கனு சோம் சொல்லிருப்பாரு போல. இந்த டாஸ்க்ல சோம் கிட்ட flirting பண்ற மாதிரி பேசி அவரை ஹெட் மசாஜ்க்கு கூப்பிடனும். இது தான் சனம்க்கு கொடுக்கப்பட்ட டாஸ்க். சனமும் நல்லா பண்ணினாங்க. டாஸ்க் முடியும் போது சோம்க்கு ஹெட் மசாஜ் செஞ்சு முடிக்கனும். டாஸ்க்கை முடிச்சதுக்கு அப்புறம் தான் பஞ்சாயத்து ஆரம்பிச்சது.

ஆக்சுவலா சனம்க்கு இந்த ஹெட் மசாஜ் மேட்டர் சுத்தமா பிடிக்கல. அர்ச்சனா குரூப்ல ரியோ, ரமேஷ், சோம் 3 பேருக்குமே ஹெட் மசாஜ் பண்றது அடிக்கடி நடக்குது. ரமேஷுக்கு அடிக்கடி தலைவலி வரும் போது செய்ய ஆரம்பிச்சது, அது அப்படியே கண்டினியூ ஆகிட்டு இருக்கு. பெண்கள், ஆண்களுக்கு செய்யறது சனம்க்கு பிடிக்கலை. அதை வெளிப்படையா சொல்லவும் செஞ்சுருக்காங்க. ஆனா நேத்து டாஸ்க்ல சோம் கூப்பிட்டு அதே ஹெட் மசாஜ் செய்ய சொன்னது சனம்க்கு சுத்தமா பிடிக்கலை. அர்ச்சனா குரூப்போட சேர்ந்து சனமும் ஹெட் மசாஜ் செய்யறதா வெளிய தெரியும்னு சனம் பயப்படறாங்க. டாஸ்க் முடிஞ்ச உடனே சோம் கிட்ட தன்னோட கோபத்தை வெளிப்படுத்தறாங்க. சோம் சாரி சொல்லியும் கேக்கற நிலைமைல இல்லை.

இதை பார்த்துட்டு இருந்த ஆரி, உடனே உள்ள போய் ரியோ கிட்ட இந்த விஷயத்தை சொல்ல, உடனே பறந்து வராரு ரியோ. ஆரிக்கும், பாலாவுக்கும் பிரச்சினை நடக்கும் போது ஷிவானி வந்து கூப்பிட்ட போது வரமாட்டேன்னு சொன்ன ரியோ, இன்னிக்கு சோம்க்கு பிரச்சினைனு சொன்ன உடனே வராரு. அதுவும் அப்ப அவரை கேப்சன் வேற. நிட் தி பாயிண்ட் யுவர் ஆனர். ஆனா அதெல்லாம் உண்ட்ட பேச முடியாதுனு சொல்லிடுச்சு சனம்.

அந்த டாஸ்க் நடுவுல இன்னொரு பிரச்சினை ஓடுச்சு. அதாவது அர்ச்சனா வந்து பர்பாமன்ஸ் செய்யும் போது "பாஸ்ஸி குமாரு" னு கேப்பி சொன்னது அர்ச்சனாவுக்கு பிடிக்கல. பாஸ் மாதிரி நடந்துக்கறாங்கனு கேப்பி சொல்லிருக்கு. இன்னொரு தடவை யாரும் அப்படி சொல்லாதீங்கனு கடுகடுனு சொல்லிட்டாங்க. டாஸ்க் நடக்கும் போதே அதுக்கு மன்னிப்பும் கேட்டாங்க கேப்பி. ஆனா அர்ச்சனா கோபமாவே தான் இருந்தாங்க. அதை பத்தி ஆஜித், ரியோ கிட்ட பேசறாங்க கேப்பி.

கால் செண்டர் டாஸ்க்ல முதல் கால் ஷிவானி -ரம்யாவுக்கு இடையில நடந்தது. ஷிவானி சேர்ந்தாப்புல இவ்வளவு நேரம் பேசி நேத்து தான் கேக்கறோம்னு நினைக்கிறேன். பைனல் 5 பேர் யார் இருப்பாங்கனு கேட்ட கேள்விக்கு. ஆரி பேரை சொல்லவே இல்லை. அதுவும் ஆரியை எதிர்ல உக்கார வச்சுட்டு.... ரைட்டு.

அடுத்து வந்தது தான் முக்கியமன நிகழ்வு.ரியோவுக்கு கால் பண்றாங்க அனிதா. இந்த உரையாடலை நாம கொஞ்சம் வித்தியாசமா பார்க்கலாம். இம்சை அரசன் படத்தை நினைவு படுத்திக்கோங்க.

சோம் : ரியோ, ரியோ அனிதா சம்பத் உன்னிடம் கேள்வி கேட்க வருகிறாள்.

ரியோ : என்ன? அனிதாவா? நாம் யாருக்கு என்ன தீங்கு செய்தோம்? நமக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது. அந்த சொக்கநாதனின் திருவிளையாடலை நம்மிடமே நிகழ்த்த வேண்டுமா?

சோம் : ஆமாம் நண்பா!....

ரியோ : என்ன ஓமாம் நண்பா!.... ஒரு காலத்தில் குட்டிப்பூனை போல அவளுக்கு அடிமையாகி சேவகம் செய்து கொண்டிருந்தாயே, அந்த பழக்கத்தில் அவளிடம் சென்று சமாதானம் பேச வேண்டியது தானே. லகுடபாண்டியே

சோம்: அடிமையாக இருந்த என்னை அன்பால் மீட்டெடுத்த அன்னையிடம் சொல்லாமல், நானாக எப்படி பேசுவது.

ரியோ : இப்போது என்ன செய்வது. என்னை தொட்டுப் பாரேன், காய்ச்சல் அடிப்பது போல் இல்லை?

சோம் : ஆம் என்னைப் போல் உனக்கும் கொதிக்கிறது.

ரியோ : என்ன, உனக்கும் காய்ச்சலா? யாருக்கும் தீங்கு நினைக்காமல், அன்பை மட்டுமே நம்பியிருக்கும் நமக்கு இப்படி ஒரு சோதனையா?

(டெலிபோன் அடிக்கிறது)

சோம் : நண்பா! அவள் தான். எடுத்து பேசு. எதையாவது சொல்லி சமாளி...

ரியோ : நான் வேண்டுமானால் பேச்சின் இடையில் "கன்னுக்குட்டி" என்று சொல்லட்டுமா? அப்படிப்சொன்னால், கேட்க வந்த கேள்வியை மறந்து சிரித்து விடுவாள் அல்லவா?

சோம் : ஆஜித்துடன் போனில் பேசுவதற்கு முன் இதை யோசித்திருக்க வேண்டும். சனமும், அனிதாவும் உற்ற தோழிகள் என்று தெரிந்தும் "அசிங்க அசிங்கமா கேப்பேன் " என்று சொன்ன போது எங்கே போனது உன் புத்தி. எடுத்து பேசு.

ரியோ : அலோ, வணக்கம் இது பிக்பாஸ் கால் செண்டர் தங்களுக்கு எவ்வாறு உதவலாம் (அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்ல)

அனிதா : வணக்கம் அங்க மார்க் இருக்காரா?

ரியோ : (மை வா: அய்யோ இப்ப எதுக்கு இதை கேக்கறானு தெரியலையே, )

யெஸ், யெஸ் மார்க் தான் பேசறேன்.
(அப்பாடா சிரிச்சுட்டா.... )

அனிதா : இந்த பிக்பாஸ் வீட்ல வெற்றியாளரா இருக்கறதுக்கு என்ன தகுதி வேணும் ரியோ...

ரியோ. 100 நாட்களை கரெக்டா வாழ்ந்துட்டு போனா போதும்.

அனிதா : "கரெக்டா" அப்படிங்கற வார்த்தைக்கு என்ன அர்த்தம் ரியோ?

ரியோ : கரெக்ட் என்றால் சரி, சரி என்றால் கரெக்ட், தங்களுக்கு தெரியாத சட்டங்கள் இல்லை, யுவர் ஆனர். கரெக்ட் என்ற வார்த்தைக்கு எந்த அர்த்தம் சரியோ, அந்த அர்த்தத்தை போட்டு நிரப்பி கொள்ளுங்கள் யுவர் ஆனர்.

அனிதா: இந்த பதில் ஏத்துக்க முடியாது.
சரி இந்த பிக்பாஸ் வீட்ல உங்க கிட்ட இருக்கற 3 தகுதிகளை சொல்லுங்க.

ரியோ : தகுதியா மேடம். இதோ இப்ப சொல்றேன். (அவ்வ்வ்வ்) முதல் தகுதி நான் டாஸ்க் எல்லாம் சிறப்பா செய்வேன் மேடம். ரெண்டாவது பார்த்துகிட்டீங்கன்னா மேடம்,.... அதாவது..... ஹிஹிஹி..... இந்த வீட்ல என்னோட வேலைகளை நான் சரியா செஞ்சுடுவேன் மேடம்...

அனிதா : அதை நானும் பார்த்துருக்கேன். அதுக்கு என்னோட பாராட்டுகள்.

ரியோ : ஓ... தேங்க் யூ மேடம் சோ ஸ்வீட் ஆப் யூ....

அனிதா : அந்த 3 வது குவாலிட்டி ?

ரியோ: அதான் மேடம்... இப்ப சொல்றேன் மேடம்.... அய்யய்யோ.....

அனிதா : ரொம்ப யோசிக்கக் கூடாதுங்க.

ரியோ: இல்லை மேடம் நான் தங்களிடம் பேசிக் கொண்டே சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்.

ரியோ : இதோ மேடம் நான் சிந்தித்துக் கொண்டே பேசிக் கொண்டிருக்கிறேன் மேடம்.

ரியோ 3 வது குவாலிட்டியா நான் என்னோட நேர்மையை சொல்றேன் மேடம்.

அனிதா : இந்த வீட்ல நேர்மைக்கு சொந்தக்காரர் இருக்கும் போது இந்த பதிலை ஏத்துக்க முடியாது.

அனிதா : குரூப்பிசம் பத்தி என்ன நினைக்கறிங்க. அதாவது......

ரியோ : அன்னை அர்ச்சனா கூட அதை பத்தி பேசிருந்தாங்க.

அனிதா : ரியோ நீங்க எப்பவும் குறுக்க பேசறா மாதிரி பேசிட்டு இருக்கீங்க... இது டாஸ்க் ஞாபகத்துல வச்சுக்கோங்க.

2 மணி நேரத்துக்கு பின்னர்.

அனிதா : இப்ப நான் என்னோட விஷயத்துக்கு வரேன்.

ரியோ : என்னது.... மறுபடியும் முதல்ல இருந்தா..... (மயக்கம் போட்டு விழுகிறார்.

இப்படியாக ரியோவை வறுத்தெடுத்தார் அனிதா.....

ஆனாலும் அனிதா பயன்படுத்திய ஹீரோ, தேவையில்லாத ஆநி போன்ற வார்த்தைகள் ரியோவை கோபப்படுத்தியிருக்கும்.

அடுத்ததாக நிஷாவுக்கு கால் செய்தார் ரமேஷ். கோபமாக பேசியதாக நம்மை நம்பச் சொல்லியிருக்கிறார். எனவே நம்பி விடுங்கள்.

இந்த டாஸ்க்கில் பேசியை வைத்து 1-13 வரை தரவரிசையில் ஹவுஸ்மேட்ஸ் தேர்ந்தெடுக்க வேண்டும் அதுவும் வீட்ல இருக்கறவங்க கலந்து பேசி ஒருமித்த முடிவு எடுக்கனுமாம். அந்த பஞ்சாயத்து தான் இன்னிக்கு. பார்ப்போம்.

Advertisement
மேலும் செய்திகள்
hindi-bigg-boss-14-new-strategy
எல்லை மீறும் இந்தி பிக் பாஸ்.. ராக்கி மற்றும் அபிநவ்வின் புதிய நெருக்கம்.. திட்டித்தீர்க்கும் நெட்டிசன்கள்..
aari-updates-in-bigg-boss
பிக் பாஸ் டைட்டில் வின்னருக்கு அடித்த ஆஃபர்.. 105 நாளில் 1 கோடி சம்பளம்.. வாயைப்பிளக்கும் ரசிகர்கள்..
biggboss-season-4-winner-updates
பிக் பாஸ் டைட்டில் வின்னர் யார் தெரியுமா?? இணையதளத்தில் கசிந்த தகவல்..
suresh-chakravarthy-reason-for-not-coming-in-bigg-boss
மொட்டை தாத்தாவை தெரிந்தே ஒதுக்கியதா விஜய் டிவி?? சலசலக்கும் நெட்டிசன்கள்..
what-happened-in-promo3-biggboss
மீண்டும் பிக் பாஸில் அழுகை குரல்.. நடிகை ரேகாவின் உருக்கமான பதிவு.. வெளியான மூன்றாவது ப்ரோமோ..
what-happened-in-bigg-boss-on-98thday
டிக்கட் டூ பினாலே வின்னர் சோமு.. ஆரி சேவ் என அறிவித்த கமல்.. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது??
bigg-boss-4-day-93-review
தொடரும் டிக்கட் டூ பைனல் டாஸ்க் - நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது?நாள் 93
what-happened-in-biggboss4-on-92th-day
கடைசி வார நாமினேஷன்.. டிக்கெட் டூ பைனல் டாஸ்க்.. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது??
what-happend-in-biggboss-on-91th-day
ஆண்டவர் வருகை.. ஆஜித் வெளியேற்றம்.. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது??
bigg-boss-4-day-90-review
ஆண்டவர் வருகை ,பாலா -ஆரி மோதல் - நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது ?நாள் 90

READ MORE ABOUT :