கேப்டன்சி டாஸ்கின் குறும்படம்.. ஆரி, ரம்யா சேவ்.. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது??

Advertisement

ஆண்டவர் தினம். பச்சை கலர்ல ஒரு இராணுவ ஜெனரல் மாதிரி ட்ரெஸ் போட்டுட்டு வந்தாரு. நேற்று உலக மண் தினம்ங்கறதால மண்ணை பத்தி பேசினார். கூடவே வீட்டுக்குள்ள இருக்கறவங்க ஒரு மண்ணும் புரியாம விளையாடிட்டு இருக்காங்கனு கொஞ்சம் கடுமையா சொன்னாரு. அப்பவே தெரிஞ்சுது இன்னிக்கு பரேடு தான்.

முதல் பரேடு நிஷாவுக்கு தான். அவங்க பட்டிமன்றம் பேசின வீடியோவை சிலாகிச்சு பேசினார். அதன் மூலம் நிஷா இங்க என்ன மிஸ் பண்றாங்கனு புரிய வைக்கனும். அதான் ப்ளான். ஆனா நிஷாவுக்கு புர்ஞ்சுதானு தான் தெரியல.

அடுத்து சோம் & கேப்பி ரெண்டு பேருக்கும் தான். பேசி வச்சுகிட்டு போன் பண்ணினீங்களானு நேரடியாவே கேட்டார். ரெண்டு பேரும் சிரிச்சு மழுப்பிட்டாங்க.

அடுத்து முழு நீள பரேடு பாலாவுக்கு தான். முதல்ல சனம் முன்னாடி செருப்பால அடிச்சுகிட்டதை வன்முறையின் விளிம்புனு சொன்னதும் தான் அவன் செஞ்சதோட விளைவு பாலாவுக்கு புரிஞ்சுருக்கும். கொஞ்சம் நீளமாவே பேசினார். இடையில சனம் எழுந்து சம்பவத்தை விளக்க முயல, "உங்களுக்காக தானே பேசறேன், உக்காருங்கனு" கடுப்பாவே சொன்னார்.

பாலா அப்படி நடந்துக்கும் போது வீட்ல இருந்த யாருமே தடுக்கலை. குறிப்பா அர்ச்சனா. அன்பு, மெடிக்கல் லீவுல போய்டுச்சானு கேட்ட போது அர்ச்சனா அரண்டு போய்ட்டாங்க. நீங்க சொல்றதை செய்ங்கனு கமல் சார் சொல்லும் போது ஆரி மட்டும் தனியா கைதட்டினார். பிரேக்ல கூட பாலா சாரி கேக்கல. ப்ரேக் முடிஞ்சதுக்கு அப்புறம் கமல் சாரே சாரி கேட்டதுக்கு அப்புறம் பதறி சாரி கேட்டாரு பாலா. ஃபீல் பண்ணி சாரி கேட்டாதான் ஒத்துக்குவேன்னு அடம் பிடிச்ச சனம்க்கு ஒரு குட்டு வைச்சாரு.

இந்த பஞ்சாயத்துல சில மாற்றுக்கருத்து இருக்கு. பாலா, சனம்க்கு இடையிலான பிரச்சினை தனிப்பட்ட பிரச்சினை கிடையாது. தரவரிசைக்காக தான் பாலா ஆர்கியூ பண்ணிட்டு இருந்தார். அப்ப போய் கையை நீட்டி பேசாதேனு சொல்ல வேண்டியதில்லை. அப்படி சொன்னது பாலா சொன்னா மாதிரி ப்ரொவொக்கிங் தான். அதனால பாலாவோட எதிர்வினை சரினு சொல்ல வரலை. அந்த விஷயம் ஏன் நடந்ததுனு விசாரிக்கவே இல்லை என்பது தான் என் பாயிண்ட்.

ரெண்டாவதா அங்க இருந்த யாருமே சனம்காக பேசலை, பாலாவை கண்டிக்கவே இல்லைனு ஒரு குற்றச்சாட்டு சொல்லிருந்தார். அந்த சம்பவம் நடந்த டைம்ல சனம் முதல் இடத்துல நின்னுட்டு வீட்ல இருந்த யார் சொன்னதையும் கேக்காம வாதம் பண்ணிட்டு இருந்தாங்க. யாரையும் மதிக்கவே இல்லை. அதுக்கு கொஞ்ச நேரம் முன்னாடி தான் ரமேஷ் கூட சண்டை. அவங்க யாரையுமே மதிக்காம இருந்த போது மத்தவங்க எப்படி அவங்களுக்கு சப்போர்ட் செய்ய முடியும்.

இன்னொரு விஷயம் பாலா, சனம் சண்டை போடறது ஒன்னும் புதுசு இல்லை. அவங்க சண்டை போடாறாங்க, அப்புறம் சேர்ந்துக்கறாங்க. இன்னிக்கு சண்டை போட்டுட்டு நாளைக்கு அவங்க சேர்ந்துக்குவாங்க. ஆனா இன்னிக்கு சனம்க்காக பேசினவங்க தான் வில்லனாவோ, ஜோக்கராவோ மாறுவாங்க. வீட்ல இருக்கறவங்க தலையிடாம இருந்ததுக்கு இதுவும் ஒரு காரணமா இருக்கலாம்.

அடுத்து கேப்டன்சி டாஸ்க் குறும்படத்தோட பாலாவை வச்சு செஞ்சாரு. இந்த வீடே தனக்கு எதிரா இருக்கறா மாதிரி நினைச்சுக்கறான் பாலா. அதுவும் தனக்கு சூப்பர்வைஸ் பண்ணினது ஆரினு தெரிஞ்ச உடனே அந்த எண்ணம் இன்னும் அதிகமாகிடுச்சு. பாலா ஒரு விதமான மெண்டல் ப்ளாக்குல இருக்கறதா சொல்லிகண்டிச்சார். குறும்படம் போட்டது ரியோவுக்கும், ஆரிக்கும் பெரிய ரிலீப்.

ஆரியும், ரம்யாவும் சேவ் ஆகறாங்க. ரம்யா சேவ் ஆனதுல கேப்பிக்கு அப்படி ஒரு காண்டு.

நேத்து நடந்தா மாதிரியே இன்னிக்கும் சிதைச்சு விடுங்க கமல் சார்.

Advertisement
மேலும் செய்திகள்
hindi-bigg-boss-14-new-strategy
எல்லை மீறும் இந்தி பிக் பாஸ்.. ராக்கி மற்றும் அபிநவ்வின் புதிய நெருக்கம்.. திட்டித்தீர்க்கும் நெட்டிசன்கள்..
aari-updates-in-bigg-boss
பிக் பாஸ் டைட்டில் வின்னருக்கு அடித்த ஆஃபர்.. 105 நாளில் 1 கோடி சம்பளம்.. வாயைப்பிளக்கும் ரசிகர்கள்..
biggboss-season-4-winner-updates
பிக் பாஸ் டைட்டில் வின்னர் யார் தெரியுமா?? இணையதளத்தில் கசிந்த தகவல்..
suresh-chakravarthy-reason-for-not-coming-in-bigg-boss
மொட்டை தாத்தாவை தெரிந்தே ஒதுக்கியதா விஜய் டிவி?? சலசலக்கும் நெட்டிசன்கள்..
what-happened-in-promo3-biggboss
மீண்டும் பிக் பாஸில் அழுகை குரல்.. நடிகை ரேகாவின் உருக்கமான பதிவு.. வெளியான மூன்றாவது ப்ரோமோ..
what-happened-in-bigg-boss-on-98thday
டிக்கட் டூ பினாலே வின்னர் சோமு.. ஆரி சேவ் என அறிவித்த கமல்.. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது??
bigg-boss-4-day-93-review
தொடரும் டிக்கட் டூ பைனல் டாஸ்க் - நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது?நாள் 93
what-happened-in-biggboss4-on-92th-day
கடைசி வார நாமினேஷன்.. டிக்கெட் டூ பைனல் டாஸ்க்.. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது??
what-happend-in-biggboss-on-91th-day
ஆண்டவர் வருகை.. ஆஜித் வெளியேற்றம்.. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது??
bigg-boss-4-day-90-review
ஆண்டவர் வருகை ,பாலா -ஆரி மோதல் - நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது ?நாள் 90

READ MORE ABOUT :

/body>