ஜம்முவில் பேருந்து கவிழ்ந்து விபத்து : இருவர் பலி 22 பேர் படுகாயம்

ஜம்மு: ஜம்முவில் திடீரென பேருந்து ஒன்று கவிழ்ந்ததில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 22 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

ஜம்மு-காஷ்மீர் டாடாவில் உள்ள தாத்ரி காந்தோ சாலையில் இன்று காலை பேருந்து ஒன்று மலையில் இருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் சிக்கி 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 22 பேர் படுகாயமடைந்தனர்.

காயமடைந்தவர்களை மீட்ட அப்பகுதி மக்கள் அருகாமையில் இருக்கும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், பேருந்து அதிவேகமாக ஓட்டியதால், கட்டுப்பாட்டை இழந்து மலையில் இருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் உண்மையான காரணம் குறித்து கண்டறிவதற்காக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தனர்.

READ MORE ABOUT :