டிராக்டர் கவிழ்ந்து கோர விபத்து: 4 பேர் பரிதாப பலி

by Isaivaani, Feb 5, 2018, 10:01 AM IST

லக்னோ: படாவுன் மாவட்டத்தில் சாலையில் சென்றுக் கொண்டிருந்த டிராக்டர் திடீரென பள்ளத்தில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

உத்தரபிரதேச மாநிலம் படாவுன் மாவட்டத்தில் உள்ள உஸ்தான்பூர் என்ற இடத்தில் நேற்று முன்தினம் இரவு, டிராக்டர் ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. இதில், 6 பேர் பயணம் செய்தனர்.

அப்போது, சாலையில் ஒரு வளைவில் டிராக்டர் திரும்பியபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில் டிராக்டரில் பயணம் செய்த 6 பேரில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 2 பேர் படுகாயமடைந்தனர்.

இதுகுறித்து, தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுதொடர்பாக, வழக்கு பதிவு செய்த போலீசார், விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். இந்த கோர விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

More Crime News


அண்மைய செய்திகள்