பாங்காங்: லாட்டரியில் ரூ.8 கோடி பரிசு விழுந்தும் அதன் டிக்கெட் மாயமானதால் வேதனையில் இளைஞர் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் தாய்லாந்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
தாய்லாந்து நாட்டை சேர்ந்தவர் ஜிராவத்பாங்பான் (42). இவர், அங்கு லாட்டரி டிக்கெட் ஒன்று வாங்கி இருந்தார். ஏழ்மை குடும்பத்தை சேர்ந்த இவர் லாட்டரியில் பரிசு விழ எதிர்பார்ப்புடன் காத்திருந்தார்.
இந்நிலையில், ஜிராவத்பாங்பானுக்கு நினைத்தபடி ரூ.8 கோடியே 50 லட்சம் ஜாக்பாட் பரிசு அடித்தது. இந்த தகவலை கேட்டு சந்தோஷத்தில் மிதந்த பாங்பான், லாட்டரி டிக்கெட்டை எடுக்க அவரது வீட்டிற்குள் ஓடினார். ஆனால், வைத்திருந்த இடத்தில் லாட்டரி டிக்கெட் இல்லை. வீட்டில் பல இடங்களில் தேடியும் லாட்டரி டிக்கெட் கிடைக்காததால் அவருக்கு பரிசு கிடைக்காத நிலை ஏற்பட்டது. இது அவருக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியதால் கடிதம் ஒன்று எழுதி வைத்துவிட்டு தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ரூ.8 கோடி லாட்டரியில் பரிசு விழுந்தும் அது கிடைக்காத விரக்தியில் இளைஞர் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.