டேங்கர் வெடித்து பயங்கர தீ விபத்து: கப்பல் கட்டும் தளத்தில் 5 பேர் பலி

Feb 13, 2018, 17:30 PM IST

கொச்சி: கப்பல் கட்டும் தளத்தில் இன்று ஏற்பட்ட விபத்தில் சிக்கி 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கேரள மாநிலம், கொச்சியில் கப்பல் கட்டும் தளம் அமைந்துள்ளது. இங்கு, சாகர் பூஷன் என்ற ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு சொந்தமான கப்பலில் இன்று பராமரிப்பு பணி நடைபெற்று வந்தது. அப்போது, கப்பலில் இருந்த டேங்கர் திடீரென வெடித்து தீ விபத்து ஏற்பட்டது.

இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
தீ விபத்தில் சிக்கியவர்களை மீட்டுகும் பணியும் இடையில் நடந்தது. இதில், தீயில் கருகி 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 11 பேர் படுகாயமடைந்தனர். இவர்களை சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

விபத்தை தொடர்ந்து கப்பல் கட்டும் தளம் முழுவதும் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. மேலும், விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

More Crime News


அண்மைய செய்திகள்